காஸா போரை உடனடியாக நிறுத்துமாறு உலக நாடுகள் ஐக்கிய நாட்டுப் பொதுச் சபையில் வலியுறுத்தியுள்ளன.
அத்துடன், போரை நிறுத்த வலியுறுத்தி பல நாடுகள் வாக்களித்துள்ளன.
இதனையடுத்து இஸ்ரேலும், ஹமாஸ் கிளர்ச்சிப் படையும் உடனடியாக நிரந்தரச் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளவேண்டும்; பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஐ.நா சபை வலியுறுத்தியுள்ளது.
193 உறுப்பு நாடுகள் மேற்படி வாக்களிப்பில் பங்கேற்றன. அவற்றில் 158 நாடுகள் ஆதரித்தன. அமெரிக்காவும், இஸ்ரேலும் மேலும் 7 நாடுகளும் சண்டை நிறுத்ததிற்கு எதிராக வாக்களித்தன. 13 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
ஐ.நா சபையின் தீர்மானத்தைப் பின்பற்றியாக வேண்டுமென்பது கட்டாயமல்ல. இருப்பினும், அதற்கு அரசியல் ரீதியாக அதிக முக்கியத்துவம் உள்ளது.
பெரும்பான்மை நாடுகள் போரை நிறுத்தச் சொல்வது உலகக் கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.