இங்கிலாந்து தலைநகரின் தெற்கில் இன்று புதன்கிழமை பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த பகுதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான பனி காரணமாக பயண இடையூறு மற்றும் பாடசாலை மூடல்கள் உள்ளிட்டவற்றுடன், நேற்று செவ்வாய்க்கிழமை முதல், இங்கிலாந்தின் பெரும்பகுதி முழுவதும் பனி மற்றும் பனிக்கான வானிலை எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன.
தாமதமான அல்லது இரத்து செய்யப்பட்ட ரயில் மற்றும் விமானப் பயணங்கள் காரணமாக, இன்று பயண தாமதங்கள் ஏற்படுவதற்கான “சிறிய” வாய்ப்பு குறித்தும் இலண்டன்வாசிகள் எச்சரிக்கப்படுகிறார்கள்.
மோசமான வானிலை காரணமாக நான்கு பெரிய விமான நிலையங்கள் விமானங்களை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதுடன், பல முக்கிய வீதி மற்றும் ரயில் இணைப்புகளும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.