அமெரிக்காவின் வளர்ச்சி, பண்புகள், பாதுகாப்பு மற்றும் உலக அமைதி ஆகியவற்றில் மிகச் சிறந்த பங்காற்றியவர்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதிகள் ‘Medal of Freedom’ எனும் விருது வழங்கி வருகின்றமை வழமையாக உள்ளது.
இந்நிலையில், இம்முறை ‘Medal of Freedom’ விருது போப் பிரான்சிஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதன்முறையாக அந்த உயரிய விருதை போப்க்கு வழங்கியுள்ளார். ஜனாதிபதி பதவியில் இருந்து அவர் விலகுவதற்கு இன்று ஒரு வாரம் இருக்கும் நிலையில், இறுதியாக வெளிநாட்டுப் பயணமாக இத்தாலிக்குச் சென்று, பதக்கத்தை நேரில் வழங்க பைடன் திட்டமிட்டிருந்தார்.
எனினும், கலிபோர்னியா காட்டுத்தீத் தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்துவதால் ஜோ பைடனின் இத்தாலிப் பயணம் இரத்துச் செய்யப்பட்டது.
ஏழை மக்களுக்குச் சேவையாற்றிய போப் பிரான்சிஸின் அர்ப்பணிப்பை பைடன் பாராட்டியுள்ளார். இது தொட்பில் அவர் தனது ‘X’ தளத்தில் “உங்கள் பணிவையும் பண்பையும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. நீங்கள் காட்டும் அன்புக்கு ஈடு இணை இல்லை” என பதிவிட்டுள்ளார்.