பட்டப்பகலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து, என்ஃபீல்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
லாசன் வீதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.37 மணிக்கு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் குறித்து மெட்ரோ காவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
30 வயது மதிக்கத்தக்க ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மேலும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை முயற்சி என்ற சந்தேகத்தின் பேரில் சம்பவ இடத்தில் 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
“இது பட்டப்பகலில் நடந்த ஒரு பயங்கரமான தாக்குதல், இது என்ஃபீல்டில் உள்ள உள்ளூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பது எங்களுக்குத் தெரியும். அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஒருவரை உடனடியாக கைது செய்ய முடிந்தது” என, விசாரணையை வழிநடத்தும் வடக்கு பகுதி உள்ளூர் புலனாய்வுப் பிரிவின் துப்பறியும் ஆய்வாளர் மைக் ஹெரிக் கூறினார்.