எனது வீடிருந்த
நிலம் காடிருக்கிறது.
அதன் இடையிடையே
ஆக்கிரமிப்பு படையோடு.
விளையாடிய என் முற்றம்
முற்றிலும் புதிர் மண்டிற்று.
முற்றத்து மாமரம் அது
கிளை உடைந்து போயிற்று.
என் நிலத்தினை
வேலிக்கு வெளியே
நின்றுதான் பார்க்க
என்னால் முடிகிறது.
அங்கே ஆக்கிரமித்து
அன்னியர் இருப்பதாய்
எனக்குள் உணர்வெழுந்தது.
அழுது கொண்டேன் நான்.
இது இப்படியே
தொடர்ந்து போனால்
அந்த நிலத்தினை
என் சந்ததி மறந்து விடும்.
அடுத்து வந்தேறிய அந்த
சிங்கள குடியேற்றம். – சிங்களவர்
ஆக்கிரமித்து கொண்டு
தங்கள் ஆதியிடமென்பார்.
என் உடலெங்கும்
குருதி கொதிக்கிறது.
கோபம் குமுறி வருகிறது.
தசைகள் முறுக்கெறிற்று.
ஆனாலும் நான்
அமைதியாகவே அதை
பார்த்தவாறு கடக்கிறேன்.
நித்தமும் நடந்தபடி?
சிங்களக் காடையர்
என்றவரை விழிப்பதில்
தப்பில்லை என்று நான் – மனதில்
சொல்லிக் கொண்டேன்.
மாமாவின் வீட்டை
குறுக்கறுத்து வேலி
போட்டு மறித்தடைத்து
இருப்பதையும் பார்த்தேன்.
சில அடி தூரம் அது
எட்டி நடை.போட்டு
கடந்து விட முடியும்
ஆனாலும் சுற்றி பாதை.
எதற்கோ இப்படி
அவர்கள் செய்திருக்கிறார்.
ஆண்டாண்டு காலமாக
வணங்கிய கோவில் கூட.
வௌவால் குடியிருந்து
குசுகுசுத்துக் கொண்டன.
அன்றொரு நாள் ஒரு
போராளி சொல்லியிருந்தார்.
அவர் பேச்சின் உண்மையை
இன்று கண்டு கொண்டு நான்
நாளும் அந்த வீரதியாகியை
ஒரு கணம் எண்ணி நடக்கிறேன்.
பயிர் செய்து நாம்
ஆடும் மாடும் வளர்த்து
வீடு கட்டி சொந்தத் தோடு
கூடி வாழும் நிலமிது.
இப்படி பேய்கள் இருந்து
வீணடிக்கின்றனவே இன்னும்.
அழகும் நேர்த்தியும் மிக்க
அவர் முகாம் அமைத்திருந்து.
யாழில் இன்றும் நாம்
மீள் குடியேறாது அலைகிறோம்.
என்று விடுதலை பெறும்
எமது நிலங்கள் யாழில்.
உயர் பாதுகாப்பு வலயங்கள்
நீங்கிய யாழ்ப்பாணம்
மீண்டும் வந்து சேர வேண்டும்.
தொந்தரவுகள் இல்லாது வாழ.
நதுநசி