செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பில் இரண்டு சகோதரர்கள் வெட்டிப் படுகொலை!

கொழும்பில் இரண்டு சகோதரர்கள் வெட்டிப் படுகொலை!

0 minutes read

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஹெரகொடெல்ல பகுதியில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

23 மற்றும் 24 வயதுகளுடைய இரண்டு சகோதரர்களே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு சகோதரர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.