மருந்து ஏற்றுமதி மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது பாரிய உலகளாவிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்படுகிறது.
மருந்து ஏற்றுமதிப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பதால், மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவுக்குச் செயல்பாடுகளை மாற்றும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மருந்து நிறுவனங்களுக்குத் தனி வரித் திட்டம் உள்ளது. குறித்த வரித் திட்டத்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஐரோப்பாவின் மருந்து நிறுவனங்கள் அச்சம் தெரிவித்தன.
புதிய வரிகளால் மருந்து நிறுவனங்கள் இனி ஐரோப்பாவைத் தவிர்த்து, அமெரிக்காவில் முதலீடு செய்ய நேரிடும் என்று ஐரோப்பிய ஆணையத்துடன் நடத்தப்பட்ட சந்திப்பில் நிறுவனங்கள் எச்சரித்தன.
ஐரோப்பாவின் மருந்துத் தொழில்துறை அதன் கட்டுப்பாடுகளை மாற்றிக்கொள்ளவேண்டும். ஐரோப்பாவின் அறிவார்ந்த சொத்து விதிகளை வலுவாக்கவேண்டும் என்றும் குறித்த சந்திப்பில் அறிவுறுத்தப்பட்டது.