தேம்ஸ் நதியில் காணாமல் போன 11 வயது சிறுமியை தேடும் பணியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கலியா கோ என்ற சிறுமி மார்ச் 31 அன்று இலண்டன் நகர விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பார்ஜ் ஹவுஸ் காஸ்வே அருகே தேம்ஸ் நதிக்குள் விழுந்து காணாமல் போயுள்ளார்.
அந்த நேரத்தில் அவசர சேவைகள் பெரிய அளவில் தேடியும் அவள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) காலை ஆற்றில் ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை காலை 9.03 மணியளவில் தேம்ஸ் நதியில் ஒரு சடலம் இருப்பதாக மெட் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. உடல் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை. இருப்பினும், கலியா கோவின் குடும்பத்திற்கு இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது” என, பொலிஸார் கூறியுள்ளனர்.