இன்று காலை எழு மணியளவில் அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்திற்கு பின்புறமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆட்களற்ற காணிகுள் உட்புகுந்த சிறுத்தை மாடுகட்டுவதற்கு சென்ற ஒருவரையும் மற்றொருவரையும் தாக்கியுள்ளது.
கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் இன்று(21.06.2018) காலை ஏழு மணி முதல் மதியம் 1.00 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கிய காயத்திற்கு உட்படுத்திய சிறுத்தை புலி பொது மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பொது மக்களால் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வெறுங்கையுடன் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்தனர். இதனால் பொது மக்களுக்கும் அவர்களுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் வருவார் என அறிவிக்கப்பட்டது.
மதியம் பதினொரு மணியளவில் வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் உட்பட சில அதிகாரிகள் வருகைதந்தனர் இதற்கிடையில் எட்டு பேரை சிறுத்தை தாக்கியிருந்தது. பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுற்றி வளைத்த போது அத் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரையும் சிறுத்தை தாக்கியது.
இந்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் கிராம பொது மக்களுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உரிய நேரத்திற்கு வந்து பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனக்குற்றம் சாட்டினர். ஆனால் தங்களின் நடிவடிக்கைகளுக்கு பொது மக்கள் இடையூறு விளைவித்தனர் எனத் தெரிவித்து வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்து அங்கிருந்து சென்று விட்டனர்.
பின்னர் குறித்த பற்றைக்குள் கிராம பொது மக்கள் பொல்லுகளுடன் சென்று சுற்றி வளைத்து தேடிய போது பற்றைக்குள் இருலுந்து வெளியேறி சிறுத்தை ஒருவரை தாக்கும் போதும் ஏனைய பொது மக்களால் பொல்லுகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் கிளிநொச்சி பொலீஸார், கிராம அலுவலர் உட்பட பலரை் இருந்தனர்.
இன்று காலை முதல் பன்னிரண்டு மணி வரை பத்து பேரை சிறுத்தை தாக்கி காயப்படுத்தியது. அவர்கள் அனைவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியாலையில் சிகிசை பெற்றுவருகின்றனர்