மருதமலை பிலிம்ஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் புதிய படமான “சிறுவாணி” யில் நாயகனாக சஞ்சயும் கதாநாயகியாக ஐஸ்வர்யாவும் நடிக்கின்றார்கள்.
படப்பிடிப்பை சிறுவாணி காட்டுப் பகுதிக்குள் நடத்தினோம். கதாநாயகன் சஞ்சய், கதாநாயகி ஐஸ்வர்யாவும் காதலிப்பது போன்ற காட்சியை தூரத்தில் காமிரா வைத்து படமாக்கினார்கள். அவர்கள் காதல் வயப்பட்டு நடந்து செல்வது போல அந்தக் காட்சி அமைந்திருந்தது. திடீர் என்று இருவரும் புதைகுழியில் விழுந்து விட்டனர். பயத்தில் அவர்கள் கதற ஆரம்பித்தவுடன் காப்பற்ற நாங்கள் ஓடினோம், நடந்த சம்பவத்தை பார்த்த ஊர் மக்கள் சிலர் எங்களுடன் இணைந்து இருவரையும் காப்பாற்றினார்கள்.
இதுபோல பல சம்பங்களை சந்தித்து உருவாகும் படம் “சிறுவாணி” க்கு தேவாவின் பாடல்கள் பெரிய பலம் என்கின்றார் இயக்குனர்.