செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வெற்றி இரு மடங்கு நம்பிக்கை தரும்; தோல்வி இரு மடங்கு அனுபவம் தரும்: நடிகர் விஜய்வெற்றி இரு மடங்கு நம்பிக்கை தரும்; தோல்வி இரு மடங்கு அனுபவம் தரும்: நடிகர் விஜய்

வெற்றி இரு மடங்கு நம்பிக்கை தரும்; தோல்வி இரு மடங்கு அனுபவம் தரும்: நடிகர் விஜய்வெற்றி இரு மடங்கு நம்பிக்கை தரும்; தோல்வி இரு மடங்கு அனுபவம் தரும்: நடிகர் விஜய்

1 minutes read

 

 

வெற்றி, இரண்டு மடங்கு நம்பிக்கை தரும்; தோல்வி, இரண்டு மடங்கு அனுபவம் தரும் என்று பேசினார் நடிகர் விஜய்.

தன்னுடைய 21 ஆண்டு கால திரைப் பயணத்தில் ஆரம்ப காலக் கட்டத்தில் தன்னை வைத்து படமெடுத்து வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்த 5 தயாரிப்பாளர்களுக்கு நன்றி கூறும் விதமாக தலா ரூ.5 லட்சம் வீதம் ரு.25 லட்சத்தை சென்னையில் வியாழக்கிழமை அளித்தார் விஜய்.

“வசந்தவாசல்’ படத்தை தயாரித்த எம்.ராஜாராம், “ராஜாவின் பார்வையிலே’ படத் தயாரிப்பாளர் எஸ்.சௌந்தரபாண்டியன், “மின்சார கண்ணா’ படத் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி, “ஒன்ஸ்மோர்’ படத் தயாரிப்பாளர் சி.வி.ராஜேந்திரன், “விஷ்ணு’ படத் தயாரிப்பாளர் எம்.பாஸ்கர் ஆகியோருக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியது:

பல பேரின் கூட்டு முயற்சிதான் சினிமா. எல்லோரும் உழைப்பைத்தான் சினிமாவில் போடுவார்கள். ஆனால் தயாரிப்பாளர்கள்தான் உழைப்போடு தான் சம்பாதித்த பணத்தையும் போடுகிறார்கள். பூஜை போடுவதில் தொடங்கி பட வெளியீடு வரை 100 பேருக்கு அவர்கள்தான் சாப்பாடு போடுகிறார்கள். ஒரு தாயைப் போல இருந்து அனைவரையும் பார்த்துக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், பிரச்னையில் இருப்பதாக அறிந்து வருத்தமடைந்தேன். என் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் என்னை நம்பி படம் எடுத்தவர்களுக்கு இந்த நேரத்தில் கை கொடுப்பது கடமை எனத் தோன்றியது.

நல்ல விஷயங்கள் எப்போது தோன்றினாலும் செய்து விட வேண்டும் என நினைப்பவன் நான்.

இந்தப் பணம் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். வெற்றி, இரண்டு மடங்கு நம்பிக்கை தரும். தோல்வி, இரண்டு மடங்கு அனுபவம் தரும். அந்த அனுபவத்தை கொண்டு மீண்டும் இவர்கள் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார் விஜய்.

முன்னதாக, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் “ஜில்லா’ படத்தின் ஆடியோ சி.டி. வெளியிடப்பட்டது. இதில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, இயக்குநர் நேசன், இசையமைப்பாளர் டி.இமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More