பப்பாளி முக்கியமான பழ வகைகள் ஒன்றாகும். பப்பாளி காய் சாம்பார் கூட்டு போன்ற உணவுகள் தயாரிப்பதிலும் கூட பயன்படுகின்றது.
பப்பாளிப் பழத்தில் வைட்டமின் “ஏ” நிறைந்துள்ளது. தினமும் 1 துண்டு பப்பாளிப் பழம் சாப்பிடுவதால் செரிமான சக்தி அதிகரிக்கும். கண்பார்வை தெளிவடையும். மாலைக் கண் நோய் குணமாகும். மலம் கழிப்பது எளிதாகும். இரத்தமும் சுத்தமாகும்.
பப்பாளி வெப்பத் தன்மை கொண்டது. பப்பாளி காய் வயிற்றுப் புழுக்களை அழிக்கும்; தாய்ப் பால் சுரப்பை அதிகமாக்கும்; உடலுக்கு வெப்பத்தைத் தரும். ஆரோக்கியம் தரும்; மாதவிலக்கைத் தூண்டும்; பசியை உண்டாக்கும்.
பப்பாளியில் புரதத்தைச் செரிப்பிக்கும் ஒரு சத்துப் பொருள் அடங்கியுள்ளது. மாமிசம் சமைப்பவர்கள் பப்பாளிக் காய் சிறிதளவு மாமிசத்துடன் கலந்து வேக வைக்க உடனடியாக கறி வேகும்.
பப்பாளிக் காயைச் சாம்பார் அல்லது கூட்டு முறையில் சமையல் செய்து சாப்பிட்டு வர உடல் இளைக்கும்.பப்பாளிக் காயைத் தோல் நீக்கி சாம்பார் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.
பப்பாளி இலை, பால், காய், பழம் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை.கட்டிகள் உடைய பப்பாளிப் பாலைப் பாதிக்கப்பட்ட இடத்தின் மீது பூச வேண்டும் அல்லது பப்பாளி இலையை நசுக்கி வேக வைத்து கட்டியின் மீது வைத்துக் கட்ட வேண்டும்.