சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு கிறிஸ்தவ முறைப்படி நேற்று திருமணம் நடைபெற்றது. திரைப்பட இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தரின் மகள் இலக்கியா. இவருக்கும், ஆந்திராவைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கு சமீபத்தில் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களது திருமணம் நேற்று சென்னை அடையாறில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் எளிமையான முறையில் நடைபெற்றது. டி.ராஜேந்தர், சிம்பு, குறளரசன் ஆகியோர் திருமண ஏற்பாடுகளை கவனித்தனர். திரையுலகினர் திரளாக வந்து மணமக்களை வாழ்த்தினர்.
அன்று மாலையே அதே ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க.தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், டாக்டர் அன்புமணி ராமதாஸ், புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், டி.ஆர்.பாலு எம்.பி., முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், பிரபு, கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, நெப்போலியன், எஸ்.வி.சேகர், விவேக், விஜயகுமார், நடிகைகள் குஷ்பூ, மீனா, மும்தாஜ், பூர்ணிமா பாக்கியராஜ், இயக்குனர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, ஷங்கர், பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், சுந்தர்.சி, வசந்த், சேரன், விஜய், பாண்டிராஜ், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், செயலாளர்கள் ஞானவேல்ராஜா, டி.சிவா, விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, பட அதிபர்கள் எஸ்.தாணு, ஆர்.பி.செத்ரி, ஏ.எல்.அழகப்பன் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.