6
உலர்ந்த அத்திப்பழத்தில் விட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் நிரம்பியுள்ளது.
அத்தகைய உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பலன்கள் தெரியுமா?
- ஒரு மாதம் தொடர்ந்து நீரில் ஊற வைத்த 2-3 உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வர மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகள் சரியாகும்.
- ரத்தத்தை சுத்தம் செய்து, ப்ரீ-ராடிக்கல்களை நீக்கி, இதய நோயின் அபாயத்தில் இருந்து தடுக்க உதவுகிறது.
- இரவில் படுக்கும் போது நீரில் 2-3 துண்டுகள் அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் சாப்பிட்டு வர எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் வராது.
- பெண்கள் நீரில் ஊற வைத்த உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், மார்பக புற்றுநோயின் வளர்ச்சிக்கு காரணமான காரணிகளைத் தடுத்து, புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும்.
- உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடல் பருமன் உள்ளவர்கள் நீரில் ஊறவைத்த அத்திப்பழத்தை காலையில் அந்த நீருடன் அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும்.
- பாலியல் தொடர்பான பிரச்சனை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள், நீரில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
- நாள்பட்ட இருமல், ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம் மற்றும் தொண்டைப் புண் உள்ளவர்கள் உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து, அந்நீருடன் அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும்.
- தினமும் நீரில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பார்வை குறைபாடு, சர்க்கரை நோய், இரும்புச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது