செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் ஜீவனுக்கும் அனுசியாவுக்கும் பதவி!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் ஜீவனுக்கும் அனுசியாவுக்கும் பதவி!

1 minutes read

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமானும், கட்சியின் பிரதி தலைவராக அனுசியா சிவராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொட்டகலை சீல்.எல்.எப்.கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த விடயத்தை கட்சியின் இடைக்கால நிர்வாகசபை அறிவித்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவையடுத்து கட்சியின் நிர்வாக நடவடிக்கைகளுக்காக இடைக்கால நிர்வாகசபை ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே குறித்த இடைக்கால நிர்வாகசபை குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய மாகாண முன்னாள் அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுறை மற்றும் அனுசியா சிவராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த மருதபாண்டி ராமேஸ்வரன்,

பொதுச்செயலாளருடைய தேவைகள் எமக்கு இருக்கின்றமையால் தான் நாம் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமானை நியமித்தோம்.

தேர்தலுக்கு பிறகு கட்சியின் தலைவர் யார் என்பதை அறிவிப்போம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொருத்தவரையில் அது ஒரு குடும்பம்.

நாம் அனைவரும் சகோதரர்களை போல் ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றோம். சில கட்சிகளும், சில ஊடகங்களும் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

ஆனால் எம்மை பொருத்தவரையில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

#Arumugam Thondaman #Kotagala #Press Meet #Election

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More