ஐந்து ஆண்டுகள்.
எத்தனையோ மாற்றங்கள்.
சிறில் ராமபோசாவில் தடக்குப்பட்டு நிற்கிறது எம் அரசியல்.
நெஞ்சில் ஏறிய உஷ்ணம் இன்னமும் இறங்கவில்லை.
ரூபவாகினி காட்டிய உடலங்கள் ஆழ்மனதில் இறங்கிவிட்டன.
இறக்கும்வரை அருட்டிக்கொண்டே இருக்கும்.
என்ன செய்தாய்…
என்ன செய்கின்றாய்….என்றபடி.
விபூஷிகா…
முள்ளிவாய்க்கால் அவலத்தின் எதிரொலி.
தொடரும் அவலத்தின் ஓலம்.
என்ன செய்கிறோம் நாம்!.
சம்பூர்….
30 கோடிக்குள் தமிழ் இறைமை அடக்கப்படுகிறது.
தமிழர் பூர்வீகத்தின் உரிமை ஐ.நா.விற்குள் கரைகின்றது.
அகதி வாழ்வின் கனவு தேசமானது.
குடாநாடு…
வல்லூறுகளால் கசக்கப்படும் கலாச்சார தலைநகரம்.
‘மசாஜ்’ குடிலில், விழுமியங்கள் புதைக்கப்படும் மண்.
‘சுடர்’ களுக்கு கண்கள் கட்டப்படும் தேசம்.
கூட்டமைப்பு…
தேர்தலின் பின்னால் ஓடும் கூட்டம்.
போட்டியிடும்போது மாவீரர் நினைவு வரும் அமைப்பு.
தவிர்க்கப்பட வேண்டிய பின்னிழுக்கும் சக்தி.
முள்ளிவாய்க்கால்…
முற்றுப்பெறாத போரின் திருப்புமுனை.
வீரத்தின் விளைநிலத்தை நிர்மாணித்த ‘புலி மண்’.
சாகும்வரை அதிரவைக்கும் எங்கள் புனித மண்.
தமிழீழம்…..
வீழ்ந்தாலும் எழச் சொல்லும் தலைவனின் தேசம்.
மாவீரத்தை சுமந்து நிற்கும் அற்புதமான மண்.
எங்கள் தமிழ்இறைமைத் தேசமிது.
– இதயச்சந்திரன் –