‘கும்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லக்ஷ்மி மேனன். இவர் ‘சுந்தர பாண்டியன்’, ‘பாண்டிய நாடு’, ‘கொம்பன்’ என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். லக்ஷ்மி மேனன் கடைசியாக விஜய்சேதுபதியின் றெக்க படத்தில் தான் நடித்திருந்தார்.
பட வாய்ப்புகள் இல்லாததால், படிப்பிலும், நடன வகுப்பு எடுப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார் லட்சுமி மேனன்.
பின்னர் திருமணம் செய்து கொள்ளும் முடிவிலும் லட்சுமி மேனன் உள்ளதாக செய்திகள் வெளியானது.இந்நிலையில் இவர், விக்ரம் பிரபு நடிக்கும் படத்தில் கமிட் ஆனதால் திருமண பேச்சை நிறுத்தி விட்டு மீண்டும் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்த துவங்கினார் லட்சுமி மேனன்.
இதற்கிடையில் நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் லட்சுமி மேனன் முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் தான் லட்சுமி மேனன் ஹீரோயினாக நடிக்கிறார்.