சீயான் விக்ரம் நடிப்பில், ’டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் திரைப்படம் ‘கோப்ரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கின.
12 வித்தியாசமான வேடங்களின் விக்ரம் நடித்து வரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இர்பான் பதான் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் ‘கோப்ரா’ படக்குழுவினர் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் பிரெஞ்ச் இண்டர்போல் அதிகாரி அஸ்லான் எல்மாஸ் என்ற கேரக்டரில் இர்பான் பதான் நடிக்கின்றார் என்ற தகவலையும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த படத்திற்காக ஏஆர் ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் மிக விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.