மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா ஆகியோர் சமூக வலைத்தள பக்கத்தில் இல்லை என்று முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். மாஸ்டர் படத்திற்குப் பிறகு நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சில தினங்களாக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா ஆகியோர் பற்றிய செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் இவர்கள் சமூக வலைத்தளத்தில் இருப்பதை அறிந்து விஜய் ரசிகர்கள் உட்பட பலர் பின் தொடர ஆரம்பித்தார்கள்.
ஆனால், உண்மையில் ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா இருவரும் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத்தளங்களில் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இதை விஜய் தரப்பில் உறுதி செய்து இருக்கிறார்கள். இவர்கள் பெயரை கொண்ட சமூக வலைத்தள கணக்குகள் அனைத்தும் போலியானவை என்றும் கூறி இருக்கிறார்கள்.