சென்னை:
நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். இப்படப்பிடிப்பிற்காக லண்டன் சென்று திரும்பிய நடிகர் வடிவேலுவுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இயக்குநர் சுராஜுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவரும் போரூர் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடிவேலுவும், தானும் நலமாக இருப்பதாக சுராஜ் தெரிவித்துள்ளார்.