பேச்சிலர் மற்றும் ஜெயில் படத்தை தொடர்ந்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் குடியரசு தினத்தில் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் மற்றும் ஜெயில் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், இவர் நடிப்பில் உருவாகி ஐங்கரன் திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
காமன்மேன் நிறுவனம் சார்பில் பி.கணேஷ் ஐங்கரன் படத்தை தயாரித்துள்ளார். ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இப்படத்தை இயக்கி இருக்கிறார். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக, மகிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும், காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், ரவி வெங்கட்ராமன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.