தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை தற்போது தொடங்கி இருக்கிறார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் தனுஷ், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்ட பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் ‘வாத்தி’ படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி இருக்கிறார்கள்.