செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் பாடலாசிரியர் காமகோடியான் மறைவு

பாடலாசிரியர் காமகோடியான் மறைவு

1 minutes read

தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான காமகோடியான் உடல்நலக் குறைவின் காரணமாக நேற்றிரவு 8 மணி அளவில் சென்னையில் காலமானார்.

1990 ஆம் ஆண்டில் வெளியான ‘வாழ்க்கைச் சக்கரம்’ என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக தன் கலைப் பயணத்தை தொடங்கியவர் காமகோடியான். ‘கண்ணாத்தாள்’, ‘கும்பகோணம் கோபாலு’, ‘பாட்டாளி’, ‘மௌனம் பேசியதே’, ‘மதுமதி’, ‘வல்லமை தாராயோ’, ‘மாப்பிள்ளை’ உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியிருக்கிறார். 

இசை அமைப்பாளர் களான எம்எஸ் விஸ்வநாதன் தேவா இசைஞானி இளையராஜா எஸ் ஏ ராஜ்குமார் பரத்வாஜ் யுவன்சங்கர்ராஜா உள்ளிட்ட பல இசை அமைப்பாளர்களிடம் பாடல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ‘மௌனம் பேசியதே’ படத்தில் இவர் எழுதிய ‘என் அன்பே என் அன்பே..’ என தொடங்கும் பாடல் பிரபலமானது.

‘கலை வித்தகர்’, ‘கற்பனை சுடரொளி’, ‘கவியரசு கண்ணதாசன் விருது’ ஆகிய விருதுகளை வென்றிருக்கும் இவருக்கு தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் 2019 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டிருக்கிறது.

76 வயதான இவர் முதுமையின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் நேற்று இரவு 8 மணி அளவில் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று சென்னையில் நடைபெறுகிறது. பாடலாசிரியர் காமகோடியான் மறைவிற்கு கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More