தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் சினிமா பிரபலங்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகைகள் மீனா, திரிஷா, லட்சுமி மஞ்சு, செரீன், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும், நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், சத்யராஜ், விஷ்ணு விஷால், இயக்குனர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி வருகிறார்கள். இந்நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக விளங்கும் இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.