இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத படத்தின் இசையமைப்பாளராக டி இமான் மீண்டும் பணியாற்றவிருக்கிறார்.
“வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சுசீந்திரன். தொடர்ந்து விளையாட்டு தொடர்பாகவும், ஆக்சன் ஃபேமிலி டிராமா பிரிவிலும், ஏராளமான படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் தற்போது “ஏஞ்சலினா” என்ற படம் தயாராகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து அவர் புதிதாக இயக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் இசையமைப்பாளராக பணியாற்ற டி இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான “பாண்டிய நாடு”, “ஜீவா”, “பாயும் புலி”, “மாவீரன் கிட்டு”, “நெஞ்சில் துணிவிருந்தால்”, “கென்னடி கிளப்” ஆகிய ஆறு படங்களுக்கு இசையமைத்த இவர், தற்போது புதிதாக இயக்கவிருக்கும் படத்திற்கும் டி இமான் இசையமைக்கிறார்.
இவர்கள் இருவரும் ஏழாவது முறையாக இணைந்து பணியாற்றுகின்றனர். நல்லுசாமி ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தாய். சரவணன் இயக்கத்தில் தயாராகும் இந்தப் படத்தில் பணியாற்றும் நாயகன் நாயகி தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் 1ஆம் திகதி என்று தொடங்கும் என இயக்குநர் சுசீந்திரன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“பாண்டியநாடு” படத்தின் வெற்றிக்கு காரணமான டி இமான், தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரனின் வெற்றி படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இவர்கள் 7 வது முறையாக மீண்டும் இணௌயவிருப்பதால் இந்த படத்திற்கு தொடக்க நிலையிலேயே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.