லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘விக்ரம்’
பெரிய எதிர்பார்ப்புகளிடையே நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல், ‘விக்ரம்’ படத்திற்கு பிறகு அவர் நடிக்கும் அடுத்த படத்தின் வெளியீடு பற்றி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கமல்ஹாசன், மலையாள இயக்குனரான மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க இருப்பதை உறுதி செய்துள்ளார்.
இந்த அறிவிப்பு ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் மகேஷ் நாராயணன் விஸ்பரூபம் 2 படத்தின் எடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.