தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நட்சத்திரமான ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘லப்பர் பந்து’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அத்துடன் படத்தின் டைட்டில் லுக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது.
திரைப்பட கதாசிரியரான தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘லப்பர் பந்து’. இதில் ஹரிஷ் கல்யாண், ‘அட்டகத்தி’ தினேஷ், காளி வெங்கட், நடிகைகள் சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எஸ். லக்ஷ்மண் குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அத்துடன் படத்தின் டைட்டில் லுக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஹரிஷ் கல்யாண் – ‘அட்டகத்தி’ தினேஷ் என வித்தியாசமான கலைஞர்களின் கூட்டணியில் தயாராவதாலும், படத்திற்கு ‘லப்பர் பந்து’ என எளிய மனிதர்களின் வழக்கு மொழிச் சொல்லை தலைப்பாக சூட்டி இருப்பதாலும் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.