புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தூக்குதுரை | திரைவிமர்சனம்

தூக்குதுரை | திரைவிமர்சனம்

1 minutes read
ஓப்பன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அன்பு, வினோத்,அரவிந்த் ஆகியோரது தயாரிப்பில் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கி யோகி பாபு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “தூக்குதுரை”

இப் படத்தில் இனியா,பால சரவணன்,மகேஷ், சென்ராயன்,அஸ்வின்,ராஜேந்திரன் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதாநாயகி இனியா ஒரு அரச குடும்பத்தின் வம்சாவளியை சார்ந்தவர் அதே சமயம் ,யோகி பாபு ஊர் திருவிழாக்களில் ப்ரொஜெக்டர் மூலம் இயக்கும் திரைப்பட ஆபரேட்டராகக் பணிபுரிந்து வருகிறார் ஜமீன்தார் பெண்ணான இனியா, யோகிபாபுவை காதலிக்கிறார்.

இதனால் கோபம் கொள்ளும் ஜமீன்தார் யோகி பாபுவை கிணற்றில் வைத்து எரித்து விடுகிறார்.

இந்த கிணற்றில் அரச குடும்பத்தின் விலை உயர்ந்த கிரீடம் மாட்டி கொள்கிறது.

இதை எடுக்க முயற்சி செய்பவர்களை யோகிபாபு பேயாக வந்து பயமுறுத்துகிறார். இந்த கீரிடம் அரச குடும்ப வம்சா வளியினருக்கு கிடைத்ததா? அந்த கிணற்றில் பேயாக இருக்கும் யோகி பாபு வை தாண்டி எப்படி கீரிடம் அவர்களிடம் கிடைத்தது அதற்காக என்னென் போராட்டங்களை ஊர் மக்கள் சந்தித்தார்கள் என்பது தான் படத்தின் கதை

யோகி பாபு மற்றும் இனியா தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்

பால சரவணன் வசனங்கள் சென்ராயன் காமெடி ஒன்றும் பெரிதாக எடுபடவில்லை

மொட்டை ராஜேந்திரன் நகைச்சுவை ஓரளவுக்கு பரவாயில்லை

ஒளிப்பதிவாளர் ரவி வர்மா ஒரே இடத்தில் கேமராவை சுத்தி சுத்தி எடுத்துள்ளார்.

கௌரவக் கொலையை மையபடுத்தி திகில்-நகைச்சுவை போன்ற காமெடிகளை உள்ளடக்கி பார்வையாளர்களை ரசிக்க வைக்க முயற்ச்சித்துள்ளார் டென்னிஸ் மஞ்சுநாத்

மொத்தத்தில் “தூக்கு துரை” யோகிபாபுவை பிடித்தவர்களுக்கு* இப் படம் ஒரு
காமெடி திரில்லர்

Edited by Mahendran

நன்றி : வெப்துனியா.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More