நகைச்சுவை நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கருடன். இப்படம் மே 31-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூரி வாழ்க்கையில் தான் கடந்து வந்த பாதை குறித்து மனம் திறந்த பேசி உள்ளார். நகைச்சுவை நடிகரான சூரி, தமிழ் சினிமாவில் தனது ஆரம்ப காலகட்டத்தில் மறுமலர்ச்சி, ரெட், வின்னர் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், இவரால், பெரியதாக பிரகாசிக்க முடியவிலை. அதன் பின் ‘வெண்ணிலா கபடி குழு படத்தில் சூரிக்கு பரோட்டா சாப்பிடம் காட்சி சிறப்பாக அமைந்து, சினிமாவில் சூரிக்கு என்று ஒரு இடம் கிடைத்தது. இதை தொடர்ந்து, நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, சூர்யா போன்ற முன்ணனி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க தொடங்கி, தனது திறமையால் ரசிகர்கள் மனதில் தனக்கு என்று தனி இடத்தை பிடித்தார்.
நடிகர் சூரி: நகைச்சுவை நடிகராக நம்மை சிரிக்க வைத்த சூரி, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை பாடத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கினார். படத்தில் சூரியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. விடுதலை படத்தின் 2 ஆம் பாகத்திற்காக மக்கள் காத்திருக்கின்றனர். இப்படத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, சூரி, இயக்குனர் துரை செந்தில் இயக்கத்தில் உருவாகி உள்ள கருடன் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம், மே 31ந் தேதி வெளியாக உள்ளது. பனியன் கம்பேனியில்:
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சூரி, என் குடும்பம் ரொம்ப பெரியது, அண்ணன் தம்பி ஆறு பேர். என் அப்பா ராஜ்கிரண் மாதிரி அனைவரையும் தோளில் தூக்கிக்கொண்டு தான் டீ கடைக்கு செல்வாரு. நான் சினிமாவிற்கு வருவதற்கு முன் 17 வயதில் திருப்பூர் பனியன் கம்பேனியில் 7 ஆண்டுகளாக வேலை பார்த்தேன். அப்போது எனக்குள் இருந்த சினிமா ஆசையை துண்டி, என்னை சினிமாவிற்கு அழைத்து வந்தது என் நண்பன் வெற்றி வீரன். அவர் பாரதிராஜாவிடன் உதவி இயக்குநராக இருந்தார்.
வாய்ப்பு தேடி அலைந்தேன்: சென்னைக்கு வந்து போட்டோவை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு கம்பேனியாக நடந்தே சென்று போட்டோவை கொடுத்துவிட்டு வருவோம். அப்போது, இங்கு இருப்பவர்கள் மணிரத்னம் கம்பேனியில் ஆடிசன் நடக்கிறது என்று சொல்வார்கள். அங்கு கொடுப்பதற்கு கையில் போட்டோ இருக்காது. இதனால், மீண்டும் போட்டோ கொடுத்த கம்பேனிக்கு சென்று போட்டோவை கேட்டு வாங்கி இருக்கிறேன்.
அண்மையில் மதுரைக்கு சென்றேன் அப்போது, அங்கு என்னுடைய போஸ்டரை பலர் ஒட்டிக்கொண்டு இருந்தார்கள் அதைப்பார்த்து, நானும் ஒரு காலத்தில் இப்படித்தானே போஸ்டர் ஓட்டிக்கொண்டு இருந்தோம் என்று நினைத்து கண்கலங்கினேன் என்றார்.
கொட்டக்காளி: நடிகர் சூரி, கூழாங்கல் படத்தின் இயக்குனர் பி.எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில், கொட்டுக்காளி படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மேலும், மலையாள திரைப்படமான ஹெலன், கும்பலாங்கி நைட், கப்பெல்லா, ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான ஆனா பெல் இந்த படத்தில் நடித்துள்ளார்.
இப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த டீசர் ஒன்று கடந்த ஆண்டு வெளியான போதே இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இத்திரைப்படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிட அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நன்றி : tamil.filmibeat.com