பாடலாசிரியர் வைரமுத்துவை போலவே அவரது மகன்களான மதன் கார்கி மற்றும் கபிலன் வைரமுத்து இருவருமே பாடலாசிரியர்களாகவும் வசனகர்த்தாகவும் மாறியுள்ளனர். சூர்யாவின் கங்குவா படத்துக்கு மதன் கார்கி வசனகர்த்தாவாக உள்ள நிலையில், இந்தியன் 2 படத்துக்கு கபிலன் வைரமுத்து அந்த பணியை செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி இந்தியன் 2 படத்தில் சமீபத்தில் வெளியான கேலண்டர் சாங் பாடலையும் எழுதியவர் அவர் தான். ஷங்கர், மணிரத்னம் படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதிய வைரமுத்துவுக்கு சமீப காலமாக பாடல் எழுதும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்தாலும், அவரது மகன்கள் இருவருக்குமே பாடல் எழுதும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை மதன் கார்கி எழுதியிருந்தார். “விசில் போடு” பாடலை தொடர்ந்து அடுத்ததாக வெளியான “சின்ன சின்ன கண்கள்” பாடலையும் கபிலன் வைரமுத்து எழுதிய நிலையில், அவர் எழுதிய இரண்டு பாடல்கள் தான் தற்போது உலகளவில் யூடியூபில் டிரெண்டாகி வருகிறது. சூர்யா, கார்த்தி போல: சிவகுமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி போல வைரமுத்துவின் மகன்களான மதன் கார்கி மற்றும் கபிலன் வைரமுத்து இருவருமே சினிமாவில் மிகப்பெரிய ஆளுமைகளாக மாறியுள்ளனர். பாகுபலி படத்திற்கே புதிய மொழியை உருவாக்கி கொடுத்தது மதன் கார்கி தான். கங்குவா படத்திலும் அவருடைய உழைப்பு பெரியளவில் உள்ளது என்கின்றனர். கலக்கும் கபிலன் வைரமுத்து: மதன் கார்கியின் தம்பியான கபிலன் வைரமுத்து சித்தார்த் நடித்த உதயம் என்எச் 4 படத்துக்கு பாடல் எழுத ஆரம்பித்து பல படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார். கவண் படத்துக்கு வசனகர்த்தாவாகவும் களமிறங்கிய இவர் விவேகம், இந்தியன் 2 உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
உலகளவில் டிரெண்டிங்: கோட் படத்தில் கபிலன் வைரமுத்து எழுதிய “சின்ன சின்ன கண்கள்” பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மறைந்த பவதாரிணியின் குரலை ஏஐ மூலமாக உருவாக்கி விஜய் மற்றும் பவதாரிணி இணைந்து பாடியது போல உருவாக்கி இருந்தனர். அந்த பாடல் உலகளவில் இந்திய இசை வரிசையில் டிரெண்டாகி வருகிறது. அதே போல ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள இந்தியன் 2 படத்துக்காக அனிருத் இசையில் கபிலன் வைரமுத்து எழுதிய “காலண்டர் சாங்” பாடலும் டிரெண்டாகி வருகிறதாம்.
அண்ணனை மிஞ்சிட்டாரு: கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை விஜய் பாட மதன் கார்கி தான் லிரிக்ஸ் எழுதினார். ஆனால், அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை என்றும் உலகளவில் அது டிரெண்டாகவில்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் கபிலன் வைரமுத்து எழுதிய “சின்ன சின்ன கண்கள்” பாடல் டிரெண்டான நிலையில், அண்ணனையே மிஞ்சிவிட்டாரே என்றும் இறங்கி ஆடு கபிலா என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
வியக்க வைக்கும் காலண்டர் சாங்: பொலிவியாவில் நிஜமாகவே இருக்கும் லொகேஷனில் ஷங்கர் பிரம்மாண்டமாக காலண்டர் சாங் பாடலை 2017ம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற டெமி – லெய் டெபோவை நடனமாடவிட்டு படமாக்கியுள்ளார். ஃபேஷனின் உச்சகட்டமாக உருவாகி இருக்கும் அந்த பாடலுக்கு தரமான வரிகளை கபிலன் வைரமுத்து எழுதியிருப்பது ரசிகர்களை ரிப்பீட் மோடில் அந்த பாடலை கேட்க வைக்கிறது.
நன்றி : tamil.filmibeat.com