தேவையான பொருட்கள்
35 நிமிடங்கள்
1 கப் பச்சை சுண்டைக்காய்
வறுத்து அரைக்க:
1/2 கப் சாம்பார் வெங்காயம்
1 டேபிள் ஸ்பூன் முழு தனியா
1/4 கப் தேங்காய் துருவல்
1தக்காளி
தாளிக்க:
4டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
1/4 டீஸ்பூன் கடுகு
1/8 டீஸ்பூன் வெந்தயம்
கறிவேப்பிலை
1பச்சை மிளகாய்
1/4 கப் சாம்பார் வெங்காயம்
1/4 கப்பூண்டு
1 டீஸ்பூன் புளிக்கரைசல்
1 டேபிள் ஸ்பூன் தனியா தூள்
1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
உப்பு தேவையான அளவு
சமையல் குறிப்புகள்
1. சுண்டைக்காயை தட்டி தண்ணீரில் போட்டு கழுவி எடுத்து தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
2. வெங்காயம்,பூண்டு, தக்காளியை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
3. வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தனியாவை சேர்த்து வதக்கி, பின்பு வெங்காயம்,தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
4. சூடு ஆறியவுடன் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து காய்ந்ததும் தயாராக வைத்துள்ள சுண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
6. வேறு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம், உளுந்து பருப்பு சேர்த்து வதக்கவும்.
7. பொரிந்ததும் சாம்பார் வெங்காயம், பூண்டு,நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.அத்துடன் தனியாத்தூள்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
8. பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
9. புளிக்கரைசலை சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து கலந்து, வதக்கி வைத்துள்ள சுண்டைக்காயை சேர்த்து மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
10. எண்ணெய் பிரிந்து வந்தவுடன் இறக்கினால் சுவையான சுண்டைக்காய் குழம்பு தயார்.
11. தயாரான குழம்பை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் அருமையான சுவையில் சுண்டைக்காய் குழம்பு சுவைக்கத்தயார்.
12. இந்த சுண்டைக்காய் குழம்பு சாதம்,இட்லி, தோசையிடன் சேர்த்து சுவைத்திட மிகவும் சுவையாக இருக்கும்.