ஐரோப்பாவில் பதற்றநிலையை அதிகரிக்க முயற்சி செய்வதாக, நேட்டோ கூட்டணித் தலைவர் யென்ஸ் ஸ்டோல்ட்டன்பர்க் (Jens Stoltenberg) மீது ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
கூடுதல் அணுவாயுதங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது குறித்து நேட்டோ கூட்டணியில் பேச்சு நடத்துவதாக மாஸ்கோ கூறியது
மாஸ்கோவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த ஸ்டோல்ட்டன்பர்க், ஐரோப்பாவில் கூட்டணி ஈடுபடுத்தியிருக்கும் அணுவாயுதங்களை நவீனமாக்குவதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்ததாகக் கூறினார்.
எனினும், ரஷ்ய அரசாங்கம் குழப்பத்தை உண்டாக்கப் பார்ப்பதாக ஸ்டோல்ட்டன்பர்க் தெரிவித்துள்ளார்.
அணுவாயுதங்களைப் பற்றி நேட்டோ கூட்டணி கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.