பெண்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை எதிர்கொள்ளும் குணம் கொண்டவர்கள். இது நிச்சயம் சிக்கலான நேரம். ஆரோக்கியமான நம்பிக்கை ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.
காலை உணவை எந்த காரணத்தைக் கொண்டும் தவிர்க்க வேண்டாம்
இனப்பெருக்க உறுப்புகள் சம்பந்தப்பட்டப் பிரச்சனை இருப்பவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOD) போன்ற பாதிப்பில் இருப்பவர்களுக்கு இன்சுலின் சுரக்கும் அளவுகளில் சிக்கல் இருக்கும். இவர்கள் உடலில் சுரக்கும் அதிக அளவு இன்சுலின் டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து விடும்.
இந்த ஹார்மோன் மாதவிடாய் சுழற்சியைத் தாக்கும் தன்மை கொண்டது. அதனால் இவர்கள் நிச்சயமாகக் காலை உணவைத் தவிர்க்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த உணவின் மூலம் கிடைக்கும் கலோரிகள் இன்சுலின் அளவை குறைக்க உதவும்.மேலும் இதனால் அண்டவிடுப்பில் உள்ள சிக்கல்கள் சீர் அடையும். இதனால் இவர்கள் கருத்தரிக்கும் சாத்தியம் அதிகரிக்கும்.
நிறைய தண்ணீர் அருந்துங்கள்
போதிய அளவு தண்ணீர் அருந்துவது கருத்தரிக்கும் வாய்ப்பை சிறப்பான வகையில் அதிகரிக்கும். தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகள் நடக்கின்றன. தண்ணீர் சத்துக்களை ஒரு உறுப்பில் இருந்து மற்ற உறுப்புகளுக்குக் கடத்த பெரிதும் துணை புரிகின்றன. இதனால் இனப்பெருக்க உறுப்புகளும் சிறப்பாகச் செயல்படும்.
நன்றி : குளோபல் தமிழ் நியூஸ்