செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் பாலூட்டும் அம்மாக்களுக்கான ஊட்டச்சத்து உணவுகள் 

பாலூட்டும் அம்மாக்களுக்கான ஊட்டச்சத்து உணவுகள் 

3 minutes read

தாய்ப்பாலூட்டும் அன்னையர் புரத உணவை உட்கொள்வது முக்கியமானது. ஏனெனில், போதுமான அளவு புரதச்சத்தை உட்கொள்வது அத்தியாவசியமாக இருக்கின்ற ஒரு முக்கியமான காலமாக தாய்ப்பாலூட்டும் காலம் இருக்கிறது.

புதிதாக பிறந்த குழந்தை, முறையான ஊட்டச்சத்துக்கு தாயின் பாலையே முழுமையாக சார்ந்திருப்பதால், முதல் ஆறு மாத காலம் முழுவதிலும் குழந்தையின் ஊட்டச்சத்துக்கான முதன்மை ஆதாரமாக தாய்ப்பாலே இருக்கிறது.

எனவே, தாய்ப்பாலூட்டும் போது தனது உடலுக்குள் செல்கின்ற ஊட்டச்சத்துகள் குறித்து சிறப்பான கவனத்தை செலுத்துவது ஒரு தாய்க்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.

உடல்நலத்தை ஊக்குவிப்பது மட்டுமின்றி, மார்பகத்தில் பால் சுரப்பையும் ஊட்டச்சத்துக்கள் ஊக்குவிக்கின்றன.

குழந்தையின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் இது அத்தியாவசியமானது. துணை உணவுப்பொருட்களை உட்கொள்வதிலிருந்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது வரை பல்வேறு வழிமுறைகளில் தங்களது ஊட்டச்சத்து தேவைகளை தாய்ப்பாலூட்டும் பெண்கள் பூர்த்தி செய்ய முடியும். அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை இக்காலகட்டத்தில் எடுத்துக்கொள்வது தாயின் உடல்நலத்துக்கு மட்டுமின்றி, பச்சிளம் குழந்தையின் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது.

தாய்ப்பாலூட்டும் அன்னையர் அதிக புரதமுள்ள உணவுகளை உட்கொள்வதன் பலன்கள் ஆரோக்கியமான தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்கும். பச்சிளம் குழந்தையின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு சிறப்பான ஆதரவை வழங்கும். திசுக்கள் மற்றும் தசைகளை கட்டமைப்பதன் வழியாக உடல் எடை அதிகரிப்பை தூண்டிவிடும். ஹோர்மோன்கள், என்சைம்கள் மற்றும் உடல் எதிர்ப்பொருட்களின் உற்பத்தியில் உதவுகிறது.

தாய்ப்பாலின் ஊட்டச்சத்தை சிறப்பாக்கும் உணவுகள்

கோழிக்கறி (சிக்கன்)

பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு புரத உணவு கோழிக்கறி. எனினும், தாய்ப்பாலூட்டும் அம்மாக்களுக்கு அதிக பயனுள்ள பிற ஊட்டச்சத்துக்களையும் புரதத்தையும் அதிகளவில் கோழிக்கறி கொண்டிருக்கிறது. புரதம் தவிர, இரும்புச்சத்து, விட்டமின் B12 மற்றும் கோலின் உயிர்ச்சத்து ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாகவும் கோழிக்கறி இருக்கிறது. பிறந்த குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமான ஊட்டச்சத்துக்களாக இவை இருக்கின்றன.

முட்டைகள்

தாய்ப்பாலூட்டும் அம்மாக்களுக்கு எளிதான மற்றும் விரைவாக சமைத்து உண்ணக்கூடிய உணவாக இருப்பது மட்டுமின்றி, கோலின், விட்டமின் A, B12, D, K, செலேனியம், உப்பு மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்களை அதிகமாக கொண்டவையாகவும் முட்டைகள் இருக்கின்றன. மனித உடலின் தினசரி புரதத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சிறந்த வழிமுறையாக முட்டைகள் இருக்கின்றன என்று கூறமுடியும்.

விட்டமின் Dஇன் ஒரு முக்கிய உணவு முட்டை. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து, பச்சிளம் குழந்தையின் உடல் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு உதவுகின்றன. அதன் எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்துகின்றன. இதனால் பிரசவித்திருக்கும் தாயின் உணவுத்தொகுப்பில் அத்தியாவசியமானவையாக முட்டைகள் இடம்பெற வேண்டும்.

அவகோடா (வெண்ணெய் பழம்)

பாலூட்டும் தாய்மார்களுக்குத் தேவைப்படும் கூடுதல் சக்தியை வழங்குகின்ற ‘ஆரோக்கியமான கொழுப்புகள்’ அவகோடாவில் இருக்கின்றன. அத்துடன், உடலில் கொலஸ்ட்ரோல் அளவுகளை நெறிப்படுத்தவும் இவை உதவுகின்றன. உடலின் மைய நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் மூளை செயற்பாட்டுக்கு உதவுகின்ற புரதம், விட்டமின் E மற்றும் ஃபோலேட் ஆகிய ஊட்டச்சத்துக்களும் இப்பழத்தில் அதிகளவில் இருக்கின்றன. தாய்ப்பாலூட்டும் தாய்மாருக்கும் அவர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கும் செல் உருவாக்கத்துக்கு அவசியமான அமினோ அமிலங்களின் சிறப்பான ஆதாரமாகவும் அவகோடா (வெண்ணெய் பழங்கள்) உள்ளது.

சியா விதைகள்

கல்சியம், புரதம், நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் அதிகளவில் சியா விதைகளில் இருக்கின்றன. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களையும் அதிகளவில் இவை வழங்குகின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து, நீண்ட நேரத்துக்கு தாய் மற்றும் குழந்தையின் வயிறு நிறைந்திருப்பதை உறுதி செய்யும். சிறப்பான சுவையையும் இவை கொண்டிருப்பதால் செலட்கள், தானியங்கள், ஸ்மூத்திகள் மற்றும் பிற உணவுகளோடும் சியா விதைகளை சேர்த்துக்கொள்ள முடியும்.

சால்மன் (வஞ்சிரம்) மீன்

பாலூட்டும் தாய்மார்களுக்கு சால்மன் (வஞ்சிரம் மீன்) ஒரு மிகச்சிறந்த உணவாகும். ஒரு உயர்தர புரத ஆதாரமாக இது இருப்பதோடு, ஒமேகா 3 கொழுப்பு அமில DHAஇன் மிகச்சிறந்த ஆதார உணவுகளுள் ஒன்றாகிறது. குழந்தையின் கண் மற்றும் மூளை வளர்ச்சிக்கு ஆரம்பநிலை குழந்தைப்பருவ வளர்ச்சிக்கு அத்தியாவசியமான தைரொய்ட் ஹோர்மோன் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகின்ற செலினியம் என்ற விட்டமினும் சால்மன் மீனில் இருக்கிறது. தாய்ப்பாலில் உள்ள மற்றொரு விட்டமினான அயோடினும் சால்மன் மீனில் இருக்கிறது. இந்த விட்டமின் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியமானது.

நன்றி | வீரகேசரி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More