செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் பப்பாளி ஃபேஷியல்

பப்பாளி ஃபேஷியல்

1 minutes read

பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பதோடு சரும பொலிவையும் மெரு­கூட்டும். முகத்தில் படியும் அழுக்கையும், எண்­ணெய் பிசு­பிசுப்பு தன்மையையும் நீக்கும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி மென்மை­யையும், பொலிவையும் பெற்று தரும்.

  • முகப்பரு உள்ளவர்கள், பப்­பாளிக்­காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டு­களை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்­களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவை கூட்டும்.
  • பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டு­களாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்­டும். அதனுடன் சிறிதளவு தேன் மற்­றும் பால் கலந்து பசைபோல் குழைத்­துக்­கொள்ள வேண்டும். அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமி­டங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிளிரும்.
  • நன்கு பழுத்த பப்பாளி விழுதை ஒரு பாத்தி­ரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் நான்கு ஸ்பூன் தேன், சிறிது க்ளிசரின் சேர்த்து கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள பகுதி தவிர மீதி இடங்களில் பற்றுப்போட்டு, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவிவர, முகம் பிரகாசிக்கும்.
  • பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து, அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக் கொள்­ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்­சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மை­யானதாக மாறிவிடும்.
  • ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு, சிறிது சீனி கலந்து 30 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தேகம் மினு­மினுக்க ஆரம்பித்துவிடும்.
  • பப்பாளி பழத்தை மஞ்சள் தூளு ­டன் கலந்தும் பயன்படுத்தலாம். சில பெண்­களுக்கு முகத்தில் முடி முளைத்­துக்கொண்டிருக்கும். பப்பாளி பழத்தை கூழாக்கி அதனுடன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவிவர வேண்டும். அந்த கலவை நன்றாக உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் நாள­டை­வில் முடிகள் வளர்வது தடைபடும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More