21
கார்த்திகையில் பூ
விரியும் காலம் இது
கனவு பல கண்டவனின்
காலம் இது
உயிர் தந்த உத்தமரின்
காலம் இது
உனக்காக வாழ்ந்தவனின்
காலம் இது
காலம் எல்லாம் காத்திருந்தோர்
காலம் இது
கல்லறைகள் கவி எழுதும்
காலம் இது
கண் எதிரே நின்றவனின்
காலம் இது
கல்லறைகள் பேச வரும்
காலம் இது
எம் தமிழில் பூ விரியும்
காலம் இது
எத்தனையோ தீபங்களின்
வெளிச்சமிது
வெந்தணலில் நின்றவனின்
காலம் இது
வீரன் இவன் எழுதிச் சென்ற
வாழ்வு இது.
பா.உதயன் ✍️