5
மனதில்
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கும்
பின்னணியில்
இளையராஜா இசை
கேட்பதற்கும்
காதல் வர வேண்டுமா
என்ன.?
இதோ இந்த மின்மினிகள்
கண்சிமிட்டும்
போது
அதோ அந்த நிலவை
மறைத்த
மேகம் விலகும் போது
ஆசையாய் வளர்த்த
ரோஜாச்செடி முதல் மலரை
பிரசவித்த போது
அந்த
மரத்தடி பிச்சைகாரி
தலையைதடவி நல்லா
இரும்மா
என்ற போது
நீங்கள் காதலில்
எதிர்ப்பார்த்த
அத்தனை
பட்டாம்பூச்சிகளும்
இளையராஜா இசையும்
என்னை சுற்றி தான்
இருந்தது…!
நன்றி : எழுத்து.காம்