செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் சிறுகதை | சிங்களப் பாடகி சுஜித்தா | பொன்குலேந்திரன்

சிறுகதை | சிங்களப் பாடகி சுஜித்தா | பொன்குலேந்திரன்

13 minutes read

யூடியூபில் மெனிக்கே  மகே ஹிதே  என்ற  பிரபல்யமான சிங்கள பாடலை பாடிய  இளம் சிங்களப் பாடகியின் வாழ்கையை  கருவாக  வைத்து, சற்று  புனைவும்  கலந்து  எழுதிய  சிறுகதை இது. இந்த  கதையில் வரும்  பெயர்கள் எவரையும் குறிப்பிடவில்லை. இப்படியும் நடந்திருக்கலாம் என்பது  என்  கற்பனை.

 ****                           

 அன்று   சனிக்கிழமை, சுஜித்தாவின் தந்தை  மேஜர் ஜெனரல்  சேனா  என்ற மகாசேனா பெரேராவும்   ,  சுஜித்தாவின்  சகோதரி பூஜினியும், சகோதரன்   சுனிலும்  வீட்டில்  இருக்வில்லை.  

தன் தம்பி சுனில்  எழுதிய  பாடலுக்கு  பியானோவில் இசை  அமைத்துக் கொண்டு இருந்தாள் சுஜித்தா. அவள் தயாரிக்க  இருக்கும்  அவள் பாடிய  பாடல் கள் கொண்ட   இசை  அல்பத்தின்   முதல்  பாடல் “ஓ மனிதா”  வுக்கு இசையுடன்  பாடல்  வரிகள்  பொருந்தாததால்,   அவள் அந்த பாடலில்  சில மாற்றங்களைச் செய்து கொண்டு இருந்தாள்,  அவளின் தாய் தமாரா ,  மகளுக்கு ஒரு கப்பில்  கோப்பியும், ஒரு  சிறு பிளேட்டில்  கேக்கும்  கொண்டு வந்து   பியானோவுக்கு  அருகில் உள்ள மேசையில்   வைத்துவிட்டு   மகள்  சுஜித்தா இசை  அமைப்பதை  கண்  வெட்டாமல்  பார்த்துக்கு  கொண்டு  நின்றாள்,  அவளின்  மனதுக்குள் தன்  மூத்த மகளின்    செயலைப்  பார்த்து மட்டற்ற  மகிழ்ச்சி. சில  நிமிடங்களுக்கு  பின்  சுஜித்தா  தன் தாயை    பார்த்து  கேட்டாள்.

“அம்மே  டடி எங்கே போயிட்டார். எப்ப  வீட்டுக்கு  வருவார் “?

“சுஜித்தா  அவர் ஆர்மி ஒபிசேர்ஸ் கிளப்புக்கு பில்லியர்ட்ஸ் விளையாட  போயிட்டார்”.

“எப்ப அவர்  வீட்டுக்கு  வருவார்    அம்மே”? 

“வெகு நேரம் கழித்து வருவேன் என்று  சொல்லிப் போனார்  அது சரி நீ  ஏன் உன்  டடியை தேடுகிறாய் சுஜித்தா?

“இல்லை அம்மே, நான் தயாரிக்கும் மியூசிக்  அல்பம்  பற்றி அவருடன் பேசயிருக்கிறேன் அவளுடைய கருத்தை கேட்க விரும்புகிறேன்  அவரை   நான் வீட்டில்  காணக்  கிடைப்பதில்லை.  அவரை எப்போது சந்திக்கலாம்  என்று  எனக்கு தெரியாது”

“ மகள், எங்கள்  குடும்பத்தில் அவரைக் கண்டு பேசுவது கஷ்டமாக இருக்கிறது. என்ன செய்வது அவர் செய்யும் வேலை அப்படியாக இருக்கிறது“ என்றாள் தமாரா.

“அவருக்கு  அவரின் பிள்ளைகளை விட  அவர்   வேலை தான் முக்கியமா”? என்று சற்று கோபத்துடன் சுஜித்தா  கேட்டாள்.

“நான் என்ன செய்வது சுஜித்தா  அவருக்கு எவ்வளவோ சொல்லிவிட்டேன் அவர் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை”.

“அம்மே அவர் ஒரு போதும் என் கல்லூரிக்கு வந்து ஆசிரியர்களுடன்  என்னை பற்றி விசாரித்தது கிடையாது சில மாணவிகள் கேட்கிறார்கள் நான்  ஒரு  தனித் தா யின்  மகளா என்று. அதை  எனக்கு  கேட்க    அவமானமாக இருக்கிறது  எங்கள் குடும்பத்திற்குள் எவ்வளவு வசதிகள், பணமிருந்தும் குடும்பத்தில் சந்தோஷம் இல்லை அம்மே” என்றாள் கவலையுடன் சுஜித்தா.

“துவ (மகள்) சுஜித்தா உனக்கு ஒரு தடவை சொல்லி இருக்கிறன் என்னுடைய காதல் கதையை. நான் உன் டடியை சந்தித்து  காதலித்து திருமணம் செய்தது அவரை எயர் லங்கா விமானதில்   நான்   எயர்  ஹோஸ்டசாக இருந்த  போது   அவரை   இரு  தடவைகள் கொழும்பு  லண்டன்  பயணத்தில் சந்தித்தேன்  அதில்  இருந்து  பிறந்த எங்கள் காதல் ,  திருமணதில்  முடிந்தது, எனக்கு ஆரம்பத்தில்  தெரியவில்லை அவர் ராணுவத்தில் அதிகாரியாக இருக்கிறார் என்று.. நான் காதலிக்க தொடங்கிய பின் தான் தெரிய வந்தது“ தமாரா சொன்னாள்

  “அம்மே  உங்களுக்கும்   இருக்கும்  பிரச் சனை தான்  என்க்கும்“.

“மகள் உன் கவலை எனக்கு புரிகிறது நீ எதை எடுத்தாலும்  அதை வெற்றிகரமாக செய்து முடிப்பாய் என்று உன்னைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். கல்லூரியில் நீ படிப்பிலும் இசையிலும் நடிப்பிலும் மட்டும் விளையாட்டுப் போட்டிகளிலும் சிறந்த  மாணவி என்று உன்னை  கள்லூரியில்  எல்லோரும் பாராட்டுகிறார்கள் உன்னை போல் தான் உன் சகோதரியும் உன் தம்பியும். நான் ஏதோ கொடுத்துவைத்தவள்  உங்கள் மூவரின்  தாயாக  இருப்பதுக்கு  ஆனால் என்னை காதலித்து திருமணம் செய்த உன்  டடி, திருமணமாகி ஒரு வருடத்துக்குப் பின் முற்றாக மாறிவிட்டார். நான் அவரிடம்   ஒரு  கணவனுக்கு  உள்ள  கடமையை  எதிர் பார்த்து  அவரை   திருமணம் செய்தேன் எனக்கு வேண்டியது குடும்பத்தில் சந்தோஷம்” என்றால் கண்களில் கண்ணீர் வர சுஜித்தாவின்  தாய்   தமாரா.

“அம்மே  அது என”அம்மே உங்களுக்கு தெரியும்    டடியை  நீங்கள்  காதலிக்கும்  போது  அவர்  ஆர்மமியில்   இருப்பது ஒரு ஆபத்தான வேலை என்று , ஏனென்றால் புரட்சியாளர்கள் ஆர்மி   அதிகாரிகளை குறி வைத்துத்தான் தாக்குவார்கள் அதுவும் இப்போது போர் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது டடி அடிக்கடி வடக்கு மாகாணத்துக்கு போகிறது பற்றி எனக்கு யோசனை அம்மே”.

“இங்கே பார் சுஜித்தா ,நான் அவருக்கு எவ்வளவு சொல்லியும் அவர் நான் சொல்வதைக் கேட்கப் போவதில்லை அதனால்  அவரின்  வேலை  பற்றி  பேசாமல் அப்படியே விட்டுவிட்டேன். அது இருக்கட்டும்,  உன் கோப்பி  ஆறுகிறது  கேக்கை சாப்பிட்டு, கோப்பியை குடி” என்றாள் தமாரா.

சுஜித்தா  கோப்பியை குடித்துக்  கொண்டிருக்கும் போது சுஜித்தாயிடம்  தமாரா கேட்டாள். ”உன்னிடம் ஒன்று கேட்கலாமா துவ ( மகள்)” ?

“கேளுங்கள் அம்மே  முடிந்தால் பதில் சொல்லுகிறேன்”

“நீ தயாரிக்கும் இந்த மியூசிக் அல்பத்தின் பெயர் என்ன”?

“அம்மே ஓ மனிதா என்ற இசை ஆல்பம் இது. பத்து பாடல்களைக் கொண்டது சில பாடல்கள்  நான் பாடிய பிரபலமான பாடல்ளை  கொண்டது   இந்த  அல்பத்தின் முதல் பாடலான ஓ மனிதன் என்ற பாடலை  என்  தம்பி சுனில் எழுதி நான் இசை  அமைத்துக் கொண்டிருக்கிறேன் .

உங்ளுக்கு தெரியும் தானே அம்மே, என் சகோதரி பூஜினி   என்  பாடலுக்கு கிட்டார் வாசிக்கிறாள் என் தம்பி சுனில்  சில  பாடல்களை எழுதி  இருக்கிறான் அவன் சிலசமயம் ட்ரமும் வாசிப்பான்.  நான் பியானோ வாசித்து பாடுவேன். அதோடு மட்டுமல்ல எனது இசை  குழுவில்  உள்ள என்  சில நண்பர்களும்  சில  இசைக்கருவிகள்  வாசிப்பார்கள்” என்றாள் சுஜித்தா.

“இதக்க கேட்க எனக்கு  எவ்வளவு  ஆனந்தமாக இருக்கிறது   என்று  தெரியுமா  உனக்க?”, அது  சரி   இந்த திட்டத்தின் நோக்கம் என்ன”? என்று   கேட்டாள் சுஜித்தாவின்  தாய்  தமாரா.

“அம்மே நான் சொல்வதைக் கேட்டால் நீங்கள் அதிசயப் படுவீர்கள்”.

“என்ன அப்படி அதிசயம் சொல்  கேட்கிறன்“ தமாரா சொன்னாள்.

“இந்த ஆல்பத்தை  வெளியிட்டு  வரும்  பணத்தை  எதற்கு  நாம்   பாவிக்க   வேண்டும்  என்று  எனது  இசைக் குழு ஏற்கனவே தீர்மானித்து  விட்டது.  இதில் கிடைக்கும் பணமும் அதுமட்டுமல்லாமல் இந்த பாடல்களை நாங்கள் ஹோட்டலில் பாடி  பெறும் பணமும் சேர்த்து எங்களுக்கு பணம் வந்தால் அந்த பணத்தில் ஒரு  பகுதியை   இந்த மனித உரிமைகளினாலும், போரினாலும் பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு கொடுத்து  உதவ  இருக்கிறேன் அம்மே”  என்றாள் சுஜித்தா.

 அதைக் கேட்ட தமாரா சொன்னாள் “இதை பற்றி நீ உன்  டடியுடன்   பேசினாயா”?

“இதை பற்றி பேசுவதற்கு என்னால டடியை சந்திக்க முடியவில்லை, அப்படி  நான்  அவருடன் பேசினாலும் எனக்கு தெரியும் இந்த  இசை அல்பத்துக்கு   அவரின் ஒப்புதல் இருக்காது என்று, ஏனென்றால் இந்த  அல்பத்தில்  நான்கு  பாடல்கள்  இலங்கையில் பாதுகாப்பு  படைகள்   நடத்தும் மனித உரிமை மீறல்களை  பற்றியது . முக்கியமாக ஆர்மியும் போலீஸ் மற்றும் பாதுகாப்பு அரச  படைகள்  அவர்களோடு  சேர்ந்து அரசியல்வாதிகளிலும்   இணைந்து செய்கிறார்கள். அவர்களை பல ஊடகங்கள்; கண்டித்து எழதி  இருக்கிறது

“அப்படியா இது நல்ல முயற்சி தான் எனக்கு முன்பே  என் கணவன்  சேனா செய்யும் தொழில் பிடிக்கவில்லை/  நாங்கள்  பௌத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  அதனால் மக்களை கொள்வதை   நான் விரும்பவில்லை. வன்முறை வேண்டாம் ,ஒற்றுமையாக வாழ வேண்டும் என்கிறது  பௌத்தம்.  இங்கு இலங்கையில் நடப்பது மிகவும் வேறுபட்டது பதவிக்காகவும் பணத்துக்காகவும் அரசியல்வாதிகள் வன்முறையை  பயன்படுத்துகிறார்கள் என்றாள் தமாரா.

“அம்மே உங்களுக்கும் எனக்கும் ஒரே சிந்தனை தான் என் தம்பியும் சகோதரியும் என்னைப் போன்றவர்கள் தான் இந்த குடும்பம் ஒரு வினோதமான குடும்பம்” என்றாள் சுஜித்தா.

“அது சரி என்னது சினேகிதிகள் சொன்னார்கள் உனது பாடல்களை யூடியூபில் கேட்பதாகவும் பல மில்லியன் ரசிகர்கள்  கே ட்டு ரசித்ததாக என்று, அது  உண்மையா?

“ஆம் அம்மே உண்மை தான்.  அந்த  பாடலும்  இந்த  அல்பத்தில்  உண்டு.  இந்த ஆல்பம் வெளியீட்டு விழாவுக்கு நான் அரசியல்வாதிகளை கூப்பிடப் போவதில்லை என்றாள் சுஜித்தா.

                 “அப்ப யாரை  கூப்பிடப்  போகிறாய் சுஜித்தா “?

மூன்றுபேரை முக்கியமாக இசைக்கலைஞர்களை கூப்பிடுவதற்கு என் இசைக்குழு தீர்மானிக்தது  அதில் ஒருவர் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர் போர்க்காலத்தில் எழுச்சிப் பாடல்களை பாடினர்  மற்றது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர். அவர்  இஸ்லாமிய பக்தி பாடல்கள் பாடியவர். மற்றவர் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர். உங்களுக்கு அவரைத்  தெரியும் அம்மே. அவர் பல பாடல்கள் பாடியவர் மற்றும் சினிமாவுக்கும் பாடியவர் மிகப்பிரபலமானவர். அவரின் பெயர் அமர்தீப்” என்றாள்.

“நல்ல முடிவுதான் சுஜித்தா. உனக்கு இதை  வெளிடுவதுக்கு  தேவையான ஆரம்ப செலவுகளை  யார்  தரப்  போகிறார்கள்”?.

“அம்மே அதுக்கு நல்ல மனமுள்ள மூன்று பேர் எங்களுக்கு உதவுகிறார்கள் அதில்  ஒருவர்  பிரபல சினிமா இசையமைப்பாளர். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்/ அதுமட்டுமல்ல இங்கே சிங்கள படத்தயாரிப்பு செய்து  வரும்  ஒருவர். மற்றவர்  சிங்கள  நடிகர். இவர்களுக்கும் அரசியலுக்கும் ஒரு  வித தொடர்பும் இல்லை “ என்றாள் சுஜித்தா .

“ நீ செய்வதெல்லாம் நல்ல விஷயம்  தான் மகள், ஆனால் நீ தொடர்ந்து படித்து பட்டதாரியாக வேண்டும் இசை உனக்கு  எப்போதும் தொடர்ந்து கை கொடுக்காது காலத்தோடு இசை மாறுகிறது குறைந்தது ஒரு பத்து வருடங்கள்  தான் நீ மக்களிடையே ஆதரவைப் பெறலாம்” என்றாள் தாய் தமாரா

எனக்குத் தெரியும், என் குரல் வயதாகும்  பொது  மாறும்.  நான் இந்த இசையின் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும்  போது, ஆன்லைனில்   படித்து, நான் பட்டதாரியாக பட்டப்படிப்பை ஆரம்பித்துவிட்டேன்”

“நீ  சுஜித்தா எதையும் திட்டமிட்டு செய்பவள் அது எனக்கு தெரியும்” என்றாள்” தமாரா பெருமையுடன்.

“அம்மே எனக்கு ஒரு ஆசை இருக்கிறது அதற்கு டடி ஒப்புக்கொள்வாரா தெரியாது. அவர் ஒப்புக் கொண்டாலும் சரி  ஒப்புக் சொல்லாவிட்டாலும் சரி நான் அதை நிச்சயம் செய்வேன்” என்றாள். சுஜித்தா  உறு தி யுடன் .

“ என்ன  ஆசை சொல் சுஜித்தா? என்று  கேட்டாள் தமாரா. 

“அம்மே எனக்கு வன்னிக்கு போய் இந்த உள்   நாட்டுப்  போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரடியாக சந்தித்து பேச வேண்டும் போல் இருக்கிறது அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் .நாளாந்த சீவியத்துக்கு  என்ன செய்கிறார்கள் என்பதை அறிய  வேண்டும்  போல்இருக்கிறது அவர்கள் குடும்பத்தில் என்னைப்போல் இசையில்  திறமையும்  ஆர்வமும் உள்ள பிள்ளைகள் இருக்கத்தான் செய்வார்கள் அவர்களை நான் அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது இதை நான்  என்  இசை  குழுவுக்கு சொன்ன போது அவர்களும் அதை ஆமோதித்தார்கள்”

“ சுஜித்தா நீ உன் இசை  திறமை  மூலம் பேரும் புகழும் பெறப் போகும்புதிய  கொள்கை  உள்ள புதுமை பெண்.  பேரும்  புகழும் உள்ளவர்கள், கீழ்  மட்டத்தில் உள்ளவர்களின்  கஷ்டப்படுவதை பார்ப்பதில்லை நீ அப்படி இல்லை அதனால்தான் சொன்னேன்,  ஒரு போதும்  நீ  தீர்மானத்தை   எந்த  தடை  வந்தாலும்  செய்து  முடிப்பாய்  என்று“.

“ தாங்க்ஸ் அம்மே என்னை பற்றி உங்களது அபிப்பிராயத்தை சொன்னதற்கு நானும் நீங்களும்  பேசியதை  டடி  யோடு  கதைக்க வேண்டாம், ஏனென்றால் அவருக்கும் மனித உரிமைகளுக்கும்   வெகு  தூராம்  உங்களுக்கு தெரியுமா வெகு சீக்கிரம் உலக ஐநா சபையில் உள்ள மனித உரிமைகள் கமிஷன் பல இராணுவ அதிகாரிகளுக்கு இலங்கையை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்குச் செல்ல முடியாத தடைகளை கொண்டு வந்து விடுவார்கள் என்று. ஏற்கனவே சிலருக்கு அந்த தடைகளை விதித்து விட்டார்கள் என்று  என் நண்பர் ஒருவர் சொன்னார் என் தந்தையின்  பெயரும் இனி வரப்போகும் லிஸ்ட்டில் இருக்கிறார் என்று அவர் சொன்னார் . அது உண்மையாக இருக்குமோ எனக்கு தெரியாது“.

“ நீ என்ன சொல்லுகிறாய் மகள் கடவுளே அது உண்மையாக இருக்கக் கூடாது அதற்கு முன்னர் அவர்  வெகு  கெதியில்  ஓய்வு   பெற்று  விட வேண்டும்” என்று சொல்லி கொண்டே இருக்கிறேன்”, என்றாள் தமாரா.

“ஆனால் ஒன்று சொல்கிறேன் அம்மே அவர் முன்பு செய்த குற்றங்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆனால் அவர் சொல்லலாம்  தான்  எவ்வித  மனித   மீறல் குற்றங்களை செய்யவில்லை என்று  எனது  உயர்  அதிகாரிகள்   கட்டளை போட்ட தால் அந்த குற்றங்களை தான் செய்தேன் என்று. அதோடு தொழில் செய்யும் போது ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் தான் அரசின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட முடியாது என்று சொல்லலாம் அல்லவா”?

“எப்படி  இருந்தாலும் மனித உரிமை மீறலை உன்னுடைய தந்தை மற்ற ராணுவ அதிகாரிகளும் செய்து இருக்கிறார் என்பதை நீ ஏற்றுக் கொள்கிறாயா”?

“அம்மே  நான்   அவர்    மேல்  முழு   குற்றங்களை  சுமத்தவில்லை“

“அந்த  மனித உரிமை  விஷயம் இருக்கட்டும் மகள், நான் சேமித்து வைத்த பணம்  என்னிடம்  கொஞ்சம்  இருக்கிறது அதை   நீ  உன்  திட்டத்துக்கு  பாவிக்கலாம்“ தமாரா  சொன்னாள்.

“நன்றி அம்மா உன்னுடைய ஆதரவுக்கு நான் நினைத்தேன் என் பெற்றோரர் என்னை கைவிட்டு விட்டார்கள் என்று அப்படி இருக்கவில்லை, என் அம்மே என்னுடன் தான் இருக்கிறாள்”என்றாள் சுஜித்தா.

அந்த நேரம்  வீட்டின்  முன் கதவு தட்டும் சத்தம் கேட்டது. தமாரா போய் கதவைத் திறந்தாள் அவளின் கணவரும் இரண்டு பிள்ளைகளும் சிரித்தபடியே நின்றார்கள்.

“ இவ்வளவு நேரம் கழிச்சு வருகிறீர்களே  சேனா, சாப்பிட்டு விட்டீர்களா என்று  கணவனை  கேட்டள் தமாரா..

அவளுடைய கணவன்   சேனா “என்னை மன்னித்துவிடு இன்று பில்லியர்ட்ஸ் போட்டி நடந்தது அதில் நான் வென்றுவிட்டேன் இதோ இந்த பரிசு தந்திருக்கிறார்கள் “ என்றான் பெருமையுடன்

“என்ன பரிசுகள் உங்களுக்கு கிடைத்தாலும் எங்கள்  குடும்பத்தில் உங்களுடைய ஒற்றுமைக்கு நீங்கள் பரிசு பெற்றாக வேண்டும் அதுதான் முக்கியம் சேனா”, என்றாள் தமாரா

“நான் ஒரு நல்ல செய்தி சொல்ல இருக்கிறேன் எங்கள் குடும்பத்தில் எல்லோரும் நான் சொல்ல போறதை கேளுங்கள்” என்றான் சேனா

“சொல்ல முதல் எல்லோரும் சாப்பிட வாருங்கள், சாப்பிட்டுக்கொண்டே நாங்கள் உங்கள் விஷயத்தை கேட்கலாம் “ என்றாள் தமாரா

அன்றுதான் பல  நாட்களுக்கு   பின்  சேனாவின்  குடும்பம் ஒன்றாக இருந்து சாப்பிட் டார்கள். எல்லோர் முகத்திலும் ஒரே சந்தோஷம் .சாப்பிட முன் சுஜித்தா இசை அமைத்த ஓ மனிதா இந்தப் பாடலை எல்லோருக்கும் பாடி  பினோவில் வாசித்துக் காட்டினாள்.

பாடலைக்  கேட்ட  சுனில்  சொன்னான்” அக்கே நீங்கள் எனது பாடல்களில்  சில மாற்றங்கள் செய்து இருக்கிறீகள் அல்லவா”?

“ உண்மை  சுனில் நீ எழதிய பாடலில்  சில வரிகள் இசையுடன் அமையவில்லை அதுதான் நான் மாற்றி விட்டேன்  மன்னிக்கவும்

“பரவாயில்லை அக்கே உங்களுக்கு இசையில்  அனுபவம் இருக்கிறதே” என்றான் சுனில்  

சுஜித்தாவின்  தங்கை சொன்னாள் “அக்கே உங்களுடைய பாடலுக்கு  நான் கிடார் வாசிப்பதில்  உங்களுக்கு பிரச்சனை இல்லை  தானே? நாங்கள் நாளை மூன்று பேரும் சேர்ந்து இந்த  மெட்டை இசைக் குழுவினரரோடு சேர்ந்து இதை இரண்டு நாட்கள் பிரக்ட்டிஸ் பண்ணவேண்டும்“.

               “நிச்சயம் செய்வோம்   பூஜினி “

அது சரி அக்கா எப்போது உங்களுடைய அல்பம்  வெளிடீடு   விழா வைக்கப் போகிறீர்கள்” பூசஜினி  கேட்டாள்.  

“அடுத்த  மாதத்தில்  ஓரு    சனிக்கிழமை என்று  யோசிச்சு  இருக்கிறன். இசை  குழுவுடன்  சேந்து  நாம் முடிவு  எடுக்க வேண்டும்“

அவர்கள் பேசுவது அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த   சேனா சுஜித்தா  உனக்கு ஒரு சந்தோஷமான செய்தி சொல்ல இருக்கின்றேன் “ என்றான்.

“என்ன  செய்தி  டடி?” சுஜித்தா  தந்தையை  கேட்டாள்

“ஆர்மி  சேவையில்  இருந்து ரிட்டயராக நான்    கொடுத்த விண்ணப்பத்தை என் உயர் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் நான் அடுத்த மாதம் முதல் ஒரு  ரிட்டயரான ஆமிக்காரன்.

இனி என் மேல் மக்களை  நான் துன்புறுத்துவதாக  எவரும் குற்றம்  சுமத்த  முடியாது.அந்த அவசியம் எனக்கு இருக்கப்போவதில்லை. நான் செய்த தவறுகளை இப்போது நான் உணர்ந்துவிட்டேன் கர்மாக்களை நான் தேடிக் கொண்டேன் அதனால் உன்   இசை குழுவுடன் சேர்ந்து உனக்கு உதவி   செய்ய முடிவு  எடுத்து  விட்டேன். என்னுடன்  வேலை ராணுவத்தில் வேலை  செய்யும்  அதிகாரிசள்  உன்  பாடல்களை ரசித்தார்கள். அவர்கள்  உன் இசையை  பாராட்டிப்  பேசும் போது   என்  மனதுக்குள்  எவவளவு  சந்தோசம்  தெரியுமா? ஆனால் ஒன்று மட்டும்  சொல்லுறன் உனது கொள்கை அவர்கள் விரும்பவில்லை”, சேனா சுஜித்தாவுக்கு  சொன்னார்.

“ஏன் டடி அவர்கள் விரும்பவில்லை” என்று  சுஜித்தா  கேட்டாள்

“உனக்கு தெரியும் தானே  சுஜித்தா. உன்  சில  பாடல்கள் மனித உரிமை மீறல்களை  பற்றியது. ஆமிக்காரன்  கடமை  ஆற்றும்  போது  மனித  உரிமைகளை  பற்றி  யோப்பது  இல்லை. அவனுக்கு  கடமை  முக்கியம்

அதில் ஒரு தவறும் இல்லை எது சரி  நான்    அடுத்த மாதாம் ரிட டைடயர்ஆனதும் நானும் உன்னோடு சேர்ந்து விடுவேன் “என்றார்.

“ உண்மையாகவா சொல்கிறீர்கள் டடி’? என்றாள்  சுஜித்தா.

 “ஆமாம் நான் ஒரு பௌத்தன் நான் விகாரவைக்கு   உங்களைப்போல் போகாவிட்டாலும் சில பௌத்தபுத்தகங்களை படித்து இருக்கிறேன். எனக்கு தெரிந்த ஒரு  புத்த  பிக்கு எனக்கு  ஒரு தடவை சொன்னார் ராணுவத்தில் சேர்ந்தால்  தீய கர்மாக்களை தேடிக்  கொள்ள  வேண்டி  வரும்  என்று  அது எனது அடுத்த பிறவிக்கு நல்ல து இல்ல  என்று“

தன்  டடிக்கு தாமதித்து ஞானம்  பிறந்து  விட்டது  என்று  சுஜித்தா  தன் மனதுக்குள்  நினைத்துக்  கொண்டாள்.

தாய்  தமாரா  மகளைப் பார்த்து  கண் சிமிட்டினாள்.

அவர்கள்   வீட்டுக்குப்  பக்கத்தில்  இருந்த புத்த  விஹரராவில்  இருந்து “ புத்தம்    சரணம்  கச்சாமி”  என்ற ஒலி  கேட்டது.

பொன்.குலேந்திரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More