உன் மீது
எனக்கு
காதலெல்லாம் இல்லை..
காதல் என்ற வெறும்
மூன்றெழுத்தில் எப்படி சொல்வது,
உனக்கான
என் நேசத்தை…?
வெறும்
காதலையும் தாண்டிய
உனக்கான என்
பிரபஞ்ச நேசத்தை
சொல்லி விட,
இந்த
பூமிப்பந்தின்
எந்த மொழியிலும்,
வார்த்தை இன்னும்
கண்டுபிடிக்கப்படவே இல்லை
அல்லது
அதற்கான மொழியே இன்னும்
கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால்,
இதை கூட,
நீ சொல்லித்தான்
நான் தெரிந்து கொண்டது,
என்
அதிர்ஷ்டம்
அல்லது
துரதிர்ஷ்டம்.
இருந்தாலும்,
வெறும் நான்கெழுத்துக்களில்,
“ஐ லவ் யூ”
கண்ணம்மா…
✍️கவிதைக்காரன்
நன்றி : எழுத்து.காம்