5
காதல் மொழியை கண்களில்
பேசினாய்
கால்களில் புது வண்ண கோலம்
போட்டு விட்டாய்
வெக்கத்தில் சிவந்த மருதணியாக
மாறிவிட்டாய்
புது நிலவே என் தோல் சாய வந்து
விட்டாய்
உன் கண் இமைகளுக்கு உள்ளே என்
உயிரை வைத்து பூட்டி விட்டாய்
காதல் அலையில் என்னை தள்ளி
விட்டாய்
கோப பார்வையில் என்னை
கொன்றுவிட்டாய்
கொஞ்சி பேசி என்னை சிலிர்க்க
வைத்தாய்
உன்னை நேசிக்ககற்று தந்தாய்
– தாரா
நன்றி : எழுத்து.காம்