செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கவிஞர் கவிகூத்தனின் “கழுதை சுமந்த கவிதைகள்” நூல் இலண்டனில் வெளியீடு

கவிஞர் கவிகூத்தனின் “கழுதை சுமந்த கவிதைகள்” நூல் இலண்டனில் வெளியீடு

3 minutes read

புலம்பெயர் தேசத்தில் பலராலும் அறியப்பட்ட கவிஞர் கவிகூத்தனின் “கழுதை சுமந்த கவிதைகள்” நூல் இன்று இலண்டன் மேற்கு நகரில் அமைந்துள்ள ஹரோ வீல்ட் ஐயப்பன் ஆலய மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

சமூக வாழ்வியலை முன்னிறுத்தி கவிதை படைத்து வரும் பிரேம் ஷங்கர் கவிகூத்தன் எனும் புனைப்பெயரில் கவிதைகள் படைத்து வருகின்றார். இவரது கன்னிப் படைப்பான  “கழுதை சுமந்த கவிதைகள்” எனும் நூலை இன்று வெளியிட்டுள்ளார். 

இலண்டனில் வாழும் முன்னிலை இலக்கிய விமர்சகர்களான திரு மு நித்தியானந்தன், திருமதி மாதவி சிவலீலன், திருமதி நவஜோதி ஜோகரட்ணம் ஆகியோருடன் சட்டன் நகரசபை உறுப்பினர் பரம் நந்தா, அல்பெர்ட்டன் தமிழ் பாடசாலை தலைமை ஆசிரியர் திரு செல்வராசா மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்புச் சேர்த்தனர். 

கவிஞர் கவிகூத்தன் யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவன் ஆவார். பாடசாலைக் காலங்களில் விளையாட்டு மற்றும் தமிழ் இலக்கிய செயற்பாடுகளில் ஆர்வத்துடன் மிகுந்த ஈடுபாடு கொண்டு செயற்படுபவர். வெளியீட்டு நிகழ்வில் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சமூகம் பெருமளவில் கலந்துகொண்டு கவிஞரின் கன்னி முயற்சிக்கு ஆதரவு கொடுத்தமை பலராலும் வியந்து பார்க்கப்பட்டது.

கவிக்கூத்தன் அவர்கள் அங்கு கலந்து கொண்ட சக யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்ட நிகழ்வும் இடம்பெற்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More