11
மயங்காத விழி வளைவில்
மறைந்திடாத தேன் மழைச்சாரல்
மிதந்திடும் வான் முகிலாய்
சென்றிடாத இடமெல்லாம் தொட்டுச்செல்வாள்
கருங்குழல் தன்னில் இசை பாடும்
வசந்தமே வார்த்தைக்குள் சிக்காது
வானம்பாடி இசைக்கும் தித்திக்கும்
செங்கரும்பு இனியாள்
தொலையாத பார்வையும் தொல்லையாய்
மாறும் பார்ப்போர் நெஞ்சில்
பற்றாத பாசமும் பற்றி எரிந்திடுமே நெஞ்சிக்குழிதனில்
வற்றிடாத நேசமும் நெருக்கிடும்
உன் வருகை கண்டு…..
பார்த்தது போதும்-உன்
பார்வை ஒன்றே போதும்.
கேசுதன்