ஆயுதவழி போராட்டம் மட்டுமல்ல போர். பேனா முனைவழி போராட்டமும் போர் என்பதற்கு தீபச்செல்வனின் படைப்புக்கள் அபாரமானவை. கவிதை புனைவுகளும் நாவல் மொழிநடையும் எம் தேசத்தின் ரணங்களையும் சிதைவுகளை தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களிடையேயும் செல்களை துளைக்கிறது. அவரின் எழுத்துக்கு எழுந்த பயமுறுத்தல்கள் இன்னும் கவிதைகளுக்கும் நாவல்களும் உரமூற்றியது.
கண்ணியமிக்க அவரின் தேசப்பற்றும் மாபெரும் மாண்புமிகு எம் அருமை அண்ணன் மேதகு வே. பிரபாகரனின் காலங்கள் சிங்களஇனவாத துரோகிகளினால் மூடிமறைக்க முற்ப்படுகின்ற வேளையில் சன்னம் போல் கிழித்தெறிந்து கவிதையும் காவியமாக பொற்காலங்களை எழுத்துருவாய் உயிர்கொடுத்து சிங்கள கயவனின் வாயடைக்க செய்தவர் தீபச்செல்வன். ஈழ விடுதலை போரினை எழுத்துக்களால் கண்ணீர் வழியவிட்டவர். பல மக்களின் ஐயங்களுக்கும் பல கேள்விகளுக்கும் இவருடைய கவிதைகளும் நாவல்களும் விடைகொடுத்தன.
இவரின் வளர்ச்சிகண்டு பிதுங்கியது கயவர்விழி. எவ்வித அச்சமும் இன்றி பல்வேறு நேர்காணல்களில் தமிழர் வாழ்வியலையும் சிங்களவரின் பிரதேச வாதத்தினையும் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகளையும் சிங்களஅரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்தெறிந்தார். இவருடைய நாவல்கள் சிங்கள மொழியிலும் சரத் ஆனந்த அவர்கள் மொழியாக்கம் செய்கிறார். புதைந்த எம் மாவீரர்களின் வலியையும் அவர்களின் இனவிடுதலைக்காய் களமாடிய பொழுதுகளையும் கவிதை சிற்ப்பங்களாக்கி உயிரேற்றினார்.
சொல்லமுடியாத அச்சுறுத்தல் வந்தபோதும் பேனா முனை வரலாறு படைத்துவருகிறது. எழுத்துரிமை, பேச்சுரிமையை முடக்க பல்வேறு வழிகளில் முயன்றும் கவிதை எனது ஆயுதம் என அறைகூவல் விடுத்தவர் தீபச்செல்வன். வருங்கால தலைமுறைகள் நம் பாதைகளை மறந்துவிடக்கூடாது நம் கதைகளை தேடவேண்டும் என்ற நம்பிக்கையுடன் படைப்புக்களை உருவாக்குபவர். இவரின் பங்களிப்பு கவிதைகள் நாவல்கள் என்றில்லாமல் தமிழ் திரையுலகிலும் தனது எழுத்தாற்றலை தக்கவைத்துள்ளார்.
ஈழ விடுதலை போராட்டத்தில் பெரும் களம் கண்ட ஈழ தளபதியின் கதையினை மையமாக வைத்து இவர் சயனைட் நாவலை வெளியிட்டுள்ளார். உலக தமிழ் மக்கள் மத்தியில் பேர்ஆர்வமும் கவனமும் சயனைட் நாவலின் பக்கம் திரும்பியுள்ளது. இந்திய பெருநிலப்பரப்பில் தமிழ்த்துறை பல்லாளுமைகள் முன் மிக பிரமாண்டமாக வெளியிடப்படுள்ளது.
வலி மிகுந்த போராட்டத்தில் பலவீனமான மனித உடலின் பலவீனமான மனித மனங்களின் பலமான தகவல் பாதுகாப்பு ஆயுதமாக ஈழப்போராளிகள் சயனைட்டினை பயன்படுத்தியிருந்தனர். ஈழ விடுதலை போராட்டத்தின் மதிப்பு மிக்க ஒரு குறியீடாக சயனைட் ஈழப்போராளிகளால் நோக்கப்பட்டிருந்தது. அதன் மதிப்பினை அடையாளமாக எடுத்து பெரும் களங்கள் கண்ட ஈழ தளபதியின் ஒருவரின் கதையினை நாவலாக உயிரேற்றியுள்ளார் ஈழமண் பெற்றடுத்த பெருங்கவிஞர் தீபச்செல்வன். இவர் படைப்புக்கு வாழ்த்துக்கள் கூறி தலை வணங்கும் ஈழமண்.
கேசுதன்