9
மொழி, வரலாறு, பண்பாடு மற்றும் கலைகளை கொண்டாடவும் அங்கீகரிக்கப்பட்ட அரசாணையைப்பெறும் நோக்கத்தோடும் இந்த வருடமும் தை மாதம் 12 ம் திகதி தமிழ் மரபுத்திங்கள் பிரித்தானியாவில் மிகச்சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
தமிழர்கள் வாழுகின்ற நாடுகளில் தை மாதத்தினை தமிழர் மரபுரிமை மாதமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் செயற்பட்டுவருகிறார்கள்.
அந்த வகையில் கனேடிய அரசாங்கம் தை மாதத்தினை தமிழர் மரபுரிமை திங்களாக மாதமாக பிரகடனப்படுத்தியதுடன் மட்டுமல்லாமல் கனேடிய அரசாங்கம், பிரதேச அரசாங்கங்களும் இதற்கான மதிப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
நேற்றைய தினம் தை மாதம் 12 ம் திகதி மிகப்பெரிய அளவில் மரபுரிமை மாதத்திற்கான கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிகழ்வில் தமிழர்களின் தனித்துவமான இசை வடிவமான தமிழ் இனியம் என்ற இசை நிகழ்வும் இதனைத்தொடர்ந்து நாட்டிய நிகழ்வுகள், பேச்சுக்கள், அரங்காடல்கள் என்பன இடம்பெற்றிருந்தது. இளையோர் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டிருந்தது இன்னும் கூடுதல் சிறப்பு.
செய்திகள்
புகைப்படத் தொகுப்பு
இலண்டனில் வெகுசிறப்பாக இடம்பெற்ற தமிழ் மரபுத் திங்கள்
வணக்கம் இலண்டன் WHATSAPP
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW