செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் ஆறாம் மாதம் : குழந்தை சத்தத்தை உணரும்

ஆறாம் மாதம் : குழந்தை சத்தத்தை உணரும்

2 minutes read

ஆறாம் மாதத்தில் கர்ப்பிணித் தாயின் உடல்எடை அதிகரிக்கும். தசைகள் இறுகி முறுக்கிக்கொள்வதால் அவ்வப்போது உடல் வலி ஏற்படும். தாயின் கால் மற்றும் முகத்தில் வீக்கம் தோன்றும். குழந்தையின் உடலில் கொழுப்பு சேரும். குழந்தை அதிக நேரம் தூங்கும். அது வெளிப்புற சத்தத்தையும் கிரகிக்கத் தொடங்கும்.

தாய்க்கு இந்த காலகட்டத்தில் அதிகமாக பசிக்கும். சத்துணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்.

மனநிலையில் மகிழ்ச்சிகரமான மாற்றங்கள் உருவாகும். கவலை, குழப்பமான மனநிலை மாறி, தெளிவு பிறக்கும்.

வயிற்றின் அடிப்பாகத்தில் லேசான வலி ஏற்படும். கர்ப்பப்பையின் தசைகளின் இணைப்புகள் விரிவாக்கம் பெறுவதால் இந்த வலி தோன்றுகிறது. சிறிது நேரம் ஓய்வெடுத்தால் இந்த வலி நீங்கிவிடும்.

உடல் எடை கூடுவதால் முதுகுவலி ஏற்படும். நடக்கும்போது குதிகால் செருப்புகளை அணிந்தால் வலி அதிகரிக்கும். அதனால் அவைகளை தவிர்ப்பது நல்லது.

24-வது வாரத்தில் குழந்தையின் கண் இமைகள் திறக்கும். அப்போது குழந்தை 35 செ.மீ. வளர்ச்சி பெற் றிருக்கும். எடை 660 கிராம் இருக்கும்.

ஆறாவது மாதத்தில் கர்ப்பிணிகள் படுக்கும்போது கால்களுக்கும் தலையணை வைத்துக்கொள்வது நல்லது.

அம்மாவின் சத்தத்தையும், வெளியே எழும் குரல்களையும் குழந்தை கிரகிக்கும். பாட்டுகளை நோக்கி கவனம் திசைதிரும்பும். அதனால் இப்போது தாய்மார்கள் வயிற்றுக் குழந்தையோடு பேசத்தொடங்கவேண்டும். குழந்தை, தாயின் குரலுக்கு செவிமடுக்கும்.

தாயின் தொப்புள் வெளியே துருத்திக்கொள்ள ஆரம்பிக்கும். அது இயற்கையானதுதான். பிரசவத்திற்கு பின்பு தொப்புள் வடிவம் இயல்புநிலையை அடைந்துவிடும்.

மாலை நேரங்களில் கால்களில் நீர்கோர்க்கும். அதிக நேரம் அலுவலகத்தில் உட்கார்ந்தே வேலைபார்க்க வேண்டியிருப்பவர்கள் கால்களை சற்று மேல் நோக்கி தூக்கிவைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் உட்காரக்கூடாது. அவ்வப்போது எழுந்து சில நிமிடங்கள் நடந்துவிட்டு மீண்டும் உட்காரவேண்டும்.

பாதுகாப்பான தாம்பத்ய உறவு சுகமான அனுபவமாக தோன்றலாம். இந்த தருணத்தில் உறுப்பில் அதிக அளவில் லூப்ரிகேஷன் திரவம் சுரப்பது அதற்கான காரணமாகும்.

கால்களுக்கு கர்ப்பிணிகள் போது மான அளவு ஓய்வுகொடுக்கவேண்டும். சிலருக்கு ‘வெரிகோஸ்வெய்ன்’ போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

கர்ப்பிணியின் வயிற்றில் கை வைத்து பார்த்தால் குழந்தையின் சலனம் தெரியும்.

சர்க்கரை நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளவேண்டியது அவசியம். சர்க்கரை நோய் இருப்பதாக அறிந்தால், அதற்கான சிகிச்சையை கவனமாக தொடரவேண்டும்.

பயிற்சியாளரின் உதவியோடு உடற்பயிற்சி, யோகா சனம் போன்றவைகளை மிதமாக செய்யலாம்.

நன்றாக பசி எடுப்பதால் அளவுக்கு அதிகமாக எதையும் சாப்பிட்டுவிடக்கூடாது. சமச்சீரான சத்துணவை மட்டுமே அளவோடு சாப்பிடவேண்டும். மாக்னீஷியம் சத்து நிறைந்த உணவு கர்ப்பிணிக்கு மிக அவசியம். உணவினை சக்தியாக மாற்றுவதற்கும், உடல் சீதோஷ்ணநிலையை சீராக வைத் திருக்கவும் இந்த சத்து அவசியம். பச்சை பட்டாணி, பயறு வகைகளில் மாக்னீஷியம் சத்து இருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More