மெலனில் எனும் நிறமி சருமத்துக்கு நிறத்தை கொடுக்கிறது. இந்த நிறமியை உற்பத்தி செய்யும் மெலனோசைட் செல்களில் எண்ணிக்கை குறைவதால் முகம் மற்றும் உடலின் சில பகுதிகளில் வெள்ளைத்திட்டுக்கள் ஏற்படுகின்றன. இதுவே வெண்புள்ளி நோய் எனப்படுகிறது.
மரபணு குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், வேதிப்பபொருட்களின் தன்மை போன்றவற்றால் வெண்புள்ளி நோய் வரலாம். மேலும் தைராய்டு குறைபாடு. நீரிழிவு நோய் மற்றும் ரத்தசோகை உள்ளவர்களுக்கும் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.
வெண்புள்ளி நோய்க்கு தற்போது பல சிறப்பு சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொற்றுநோய் அல்ல. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைத்து சத்துக்களும் சம அளவில் கலந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும். காலை மற்றும் மாலை வேளைகளில் இளம் சூரிய ஒளி உடலில் படுமாறு குறைந்தது 30 நிமிடங்களாவது இருப்பது நல்லது.
வெண்புள்ளி நோய் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரும், சுற்றத்தாரும் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். எந்த காரணத்துக்காகவும் அவர்களை புறக்கணிக்கக்கூடாது.
நன்றி | யாழ் ஓசை