இந்தியாவில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமாக வயிற்றுப் புண் எனப்படும் அல்சரால் பாதிப்படைகிறார்கள். உடலுக்கென்றே தனி கடிகாரம் இயங்குகிறது.அந்தந்த நேரத்திற்கு தகுந்தாற்போல் உடல் உள்ளுறுப்புகள் செயல்படும். சரியான நேரத்திற்கு அமிலம் சுரக்கும்.
அந்த சமயத்தில் வயிற்றில் உணவில்லையென்றால் அது காலியான வயிற்றில் பரவி, குடலின் சுவர்களை அரிக்கத் தொடங்கும். தினமும் இது தொடர்கதை ஆனால் பின்னர் அமிலம் அரித்து புண்ணாகி அதுவே வயிற்றுப் புண் எனப்படும் அல்சர்.
அது தவிர்த்து வேறு காரணங்களாலும் வயிற்றுப் புண் உண்டாகும். வயிற்றில் ஹைஸ்பைலோரி என்ற பாக்டீரியாக்களால் உருவானால் அல்சர் ஏற்படும் வாய்ப்புண்டு. மேலும் தாங்க முடியாத மன அழுத்தம், அதிக கோபம், உணர்ச்சி வசபடுதல் போன்றவற்றாலும் அல்சர் உண்டாகிறது.
அதனை மருத்துவத்தால் வெறும் 1 சத்வீதம்தான் குறைக்க முடியும். உணவால் மட்டுமே அல்சரை முழுமையாக குணப்படுத்த முடிடயும்.
நன்றி | Jaffna News