ஞாபக மறதி என்ற நோய், பலரை பிடித்து ஆட்டுகிறது. இதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கின்றனர்.
வயது ஆக, ஆக இப்பிரச்னை வருவது இயல்பு. மூளையின் செயல்பாட்டுத்திறன் குறையும் போது, மூளையின் திசுக்கள் சுருங்குவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
இதை தவிர்ப்பது கடினம். ஞாபக சக்தி குறைந்தால், அல்சைமர்ஸ் என்ற வியாதி தாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இது முதுமையால் ஏற்படும் குறை. இவற்றை நாம் போக்க முடியாது. ஆனால், இதன் வேகத்தை கட்டுப்படுத்தி, மூளை செயலிழக்காமல் குறைக்கலாம்.
பிரீ ரேடிக்கல்ஸ் எனப்படும், ஒவ்வாமை சக்திகள், நம் உடலில் சேராதவாறு பார்த்துக் கொண்டால், இவை நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
இல்லையென்றால் மூளையின் அமைப்பே முற்றிலும் பாதிக்கப்படும். இவை சிகரெட் புகை, நச்சுக்காற்று, கொழுப்பு நிறைந்த உணவு போன்றவை வாயிலாக, நம் மூளைக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
சிவப்பு மாமிசமான மாட்டிறைச்சியில், அதிக கொழுப்பு உள்ளதால், இதை சாப்பிடுவதை குறைக்க வேண்டும்.
நிறைய பழங்கள், காய்கறிகள் உண்ண வேண்டும். இவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், ரேடிக்கல்ஸ் அழிக்கப்படும். மறதி தன்மை குறையும்.