0
- தைராய்டு சிக்கலுக்கு மிகவும் பொதுவான காரணம் கிரெவ்ஸ் நோய், இது தைராய்டு சுரப்பியில் உண்டாகும் கோளாறுகள் காரணமாக ஏற்படுகின்றது. இதன் காரணமாய் தைராய்டு சுரப்பி அதிக ஹார்மோன்களை சுரக்கிறது.
- தைராய்டு சுரப்பியில் உள்ள நீர்கட்டிகள் அதன் செயல்பாட்டை பாதிக்கிறது.
- உடலில் அயோடின் குறைபாடு காரணமாக தைராய்டு நோய் ஏற்படுகிறது.
- பெண்களின் கர்ப்ப காலத்தில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஹார்மோன்களில் உண்டாகும் ஏற்றத்தாழ்வுகள் தைராய்டு தொடர்பான பிரச்சினைகளுக்கு ஒரு காரணமாக அமைகிறது.
- பிட்யூட்டரி சுரப்பியில் புற்றுநோய் செல்கள் உருவாகும் போது தைராய்டு சுரப்பி செயலிழக்கக்கூடும்.
- மன அழுத்தம் மற்றும் பதட்டம் உண்டாவது தைராய்டு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. மன நிம்மதியுடன் இருப்பதே ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
- உயர் இரத்த அழுத்த நோயாளிகளிடத்தில் தைராய்டு நோய் அபாயம் அதிகரிக்கிறது.
- பெண்களுக்கு பெரும்பாலும் பிரசவத்திற்குப் பிறகு தைராக்ஸின் ஹார்மோனில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகும். சிறிது நேரத்தில் ஹார்மோனின் அளவுகள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லையேனில். ஒரு மருத்துவரைத் தொடர்பு கொண்டு இந்த பிரச்சினையை கவனியுங்கள்.