இந்தோனேஷியாவின் மிக தீவிரமான எரிமலையான சினாபங் எரிமலை மிகுந்த சக்தியுடன் எரிமலை குழம்புகளை வெளியேற்றி வருவதாக செய்திகள் கூறுகின்றன. நேற்று மாலை நிலவரப்படி எரிமலையால் உருவாகும் புகைமூட்டம் 4000 மீட்டர் வரை உயர்ந்து காணப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சுமத்ரா தீவு அருகே உள்ள இந்த எரிமலை 400 வருடங்களாக குழம்புகளை கக்கி வருகிறது. குறிப்பாக செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இந்த எரிமலையின் வீச்சு அதிகமாக இருக்கும். இதன் காரணமாக 14382 பேர் அங்கிருந்து இடம் பெயர்ந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அந்நாட்டில் உள்ள 120 சக்தி வாய்ந்த எரிமலைகளில் சினாபங்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.